ரோஜா மீது பொறாமை! எவ்வளோ ச்சீப்பானவர் நீங்க! பண்டாருவை தெலுங்கில் வெளுத்த நடிகை மீனா
சென்னை: ரோஜாவை அவதூறாக பேசிய முன்னாள் எம்பி பண்டாரு சத்யநாராயணன் எத்தனை மோசமான மனநிலை கொண்டவர் என்பது அப்பட்டமாக தெரிவதாக நடிகை மீனா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை மீனா பேசுகையில் எல்லோருக்கும் வணக்கம்! பண்டாரு சத்யநாராயண ராவ் , நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என கூறியிருந்த வீடியோவை நான் பார்த்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே சமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தது.

காலம் மாறிவிட்டது. பெண்கள் வலிமையுடையவர்களாகிவிட்டனர். பெண்கள் முன்னேற்றமும் வளர்ச்சி அடைந்துவிட்டது. இதெல்லாம் தெரியாம எத்தனை மோசமாக பேசியிருக்கீங்க நீங்க! இது ஒரு பெண்ணின் நடத்தையை மோசமாக விமர்சிப்பது. நீங்கள் ரோஜா மீது பொறாமையில் இருப்பதையே காட்டுகிறது.
பாதுகாப்பின்மையில் இருப்பதை நீங்கள் உணர்வதாகவே காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் குறித்து எத்தனை மோசமான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது. எப்படி ரோஜா குறித்து பொதுவெளியில் மோசமான கருத்தை சொன்னீர்களோ அதே போல் பொதுவெளியில் நீங்கள் (பண்டாரு) மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரோஜா சினிமா துறைக்கு வந்த போதிலிருந்தே எனக்கு அவரை தெரியும். ரோஜாவை ஒரு நடிகையாக. ஒரு பெண்ணாக, ஒரு அரசியல்வாதியாக ஒரு தாயாக ஒரு தோழியாக எனக்கு அவரை நன்றாகவே தெரியும். அப்போது முதல் இப்போது வரை ரோஜா எத்தனை கடும் உழைப்பாளி என்பதும் எனக்கு தெரியும். ரோஜா தான் கால் வைத்த சினிமா துறை, அரசியலிலும் குழந்தை வளர்ப்பிலும் ஒரு தாயாகவும் வெற்றி அடைந்துவிட்டார்.
அமைச்சர் ரோஜாவின் கேரக்டரை மோசமாக விமர்சிக்க பண்டாருவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் இப்படி ஒரு பெண்ணின் கேரக்டரை மோசமாக பேசிவிட்டால் பெண்கள் எல்லாம் பயந்து கொண்டு போய்விடுவார்கள் என நினைக்கிறீர்களா? நான் மீனாவின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என மீனா கடுமையாக பேசியுள்ளார்.
ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளவர் ரோஜா. இவர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கிறார்கள். சட்டசபையிலும் சிடிக்களை காட்டினார்கள். ஆனால் அந்த சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது.

அப்படியிருக்கும் போது என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி, பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கூறிய ரோஜா உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் தொடர்கையில் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா?
முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, நர லோகேஷ் ஆகியோர் பண்டாருவை கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிருவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவருடைய மனைவி அவரை பளார் என அறைந்திருக்க வேண்டும்.
நர லோகேஷ் வெட்கமே இல்லாமல் ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தது ஏன், நான் நிர்வாண படத்தில் நடித்தவள் என்றால் என்னை ஏன் சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்த்தார். உங்கள் கட்சியில் இருக்கும் போது நான் நல்லவராகவும் வேறு கட்சிக்கு சென்றால் நான் எப்படி கெட்டவராகவும் இருக்க முடியும்?
நான் சினிமாவில் நடித்ததால் என்னை என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? உங்களை போன்றோர் இப்படி எல்லாம் பெண்களை அவதூறாக பேசினால் அரசியலில் பெண்கள் எப்படி முன்னேறுவார்கள், எப்படி அரசியலுக்கு வருவார்கள்? பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது.
கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள். தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை, அக்கட்சியால் அரசியல் ரீதியில் வளரவே முடியாது. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என ரோஜா தெரிவித்திருந்தார். ரோஜாவை ஆபாச பட நாயகி என கூறியதற்கு நடிகைகள் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் வரிசையில் மீனாவும் கடும் கோபத்தை பதிவு செய்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications