Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலை சுற்றுதே.. தீபாவளியையொட்டி தமிழகத்தில் விண்ணை தொட்ட விமான கட்டணம்! இவ்வளவு ரூபாயா? ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (அதாவது நாளை மறுநாள்) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை செய்து வரும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

Ahead of Diwali flight ticket price increases from chennai to various place in Tamil Nadu, Details here


குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு கார், பஸ், ரயில்கள் மூலம் திரும்பி வருகின்றனர். இதனால் சென்னையில் பல சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் பஸ், ரயில்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்துவிட்டால் பலரும் அரசு சிறப்பு பஸ்களை நம்பி காத்திருக்கின்றனர். அந்த பஸ்களிலும் கூட கூட்டம் அலைமோதுவதால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் தீபாவளியையொட்டி விமானங்களில் சொந்த ஊர் செல்லவும் அதிகமான மக்கள் விரும்புகின்றனர். வழக்கமான நாட்களை விட தற்போது அதிகமான மக்கள் விமானத்தை நாடுகின்றனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு விமானங்களில் மக்கள் பயணிக்க ஆர்வமாக உள்ளனர். இதனால் விமானத்தின் டிக்கெட் கட்டணமும் பல மடங்கு வரை உயர்ந்துள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு ஒரே நேரத்தில் அதிக மக்கள் விமான பயணத்தை விரும்புவதும், விமானங்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ள நிலையில் சில உயர்வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதும் முக்கிய காரணமாகும். இதனால் தான் விமானத்தில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து விண்ணை தொட்டுள்ளது.

குறிப்பாக 4 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணம் என்பது உயர்ந்துள்ளது. அதாவது சென்னை-சேலம் இடையே வழக்கமாக விமானத்தில் ரூ.2,390 டிக்கெட் கட்டணம் இருக்கும். ஆனால் தீபாவளியையொட்டி இன்றும், நாளையும் விமான கட்டணம் என்பது ரூ.11,504 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை-தூத்துக்குடி விமான டிக்கெட் ரூ.13,287 ஆகவும், சென்னை-கோவை விமான டிக்கெட் ரூ.13,709 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.13,086ம், மதுரைக்கு ரூ.13,415 ஆகவும் விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது. இது விமான பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சொந்த ஊர் சென்று தீபாவளி கொண்டாடும் ஆர்வத்தில் வேறு வழியின்றி மக்கள் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+