Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கதை சொல்லட்டா சார்? ரூ.20 லட்சம் வரை பரிசு கிடைக்கும் கொஞ்சம் கேளுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஒரு கதை சொல்லட்டா சார்...! உங்களுக்கு அருமையா கதை சொல்ல தெரிஞ்சா உங்களுக்கு ஜாக்பாட் ஒன்னு ரெடியா இருக்குன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா சார்? நீங்க சொல்லப்போற கதைக்கு அங்கீகாரமும் கொடுத்து, உலகம் முழுதும் அதை பிரபலமாக்கி, உங்களுக்கு 20 லட்சம் வரைக்கும் பரிசு கொடுத்து, உங்க வாழ்க்கையவே புரட்டிப் போடுற மாதிரி ஒரு சம்பவம் நடந்தா என்ன சார் பண்ணுவீங்க? கேட்கும்போதே நல்லா இருக்குன்னு நினைக்கிறீங்க தானே?

ஓகே, உங்களுக்கு கதை சொல்கிற திறமை இருந்தாலோ அல்லது கவிதை எழுதுகிற திறமை இருந்தாலோ, அதை உடனே எழுத்து வடிவமாக ரெடி பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. இந்த கதையில், நீங்க உருவாக்க போகும் உங்க கதைய எழுத்து வடிவமாக கொடுத்தால் மட்டும் தான் உங்களுக்கு அந்த ஜாக்பாட் பரிசு.

Amazon Kindle Story Competition: Super chance to win Rs.20 lakhs prize

நாங்கள் சொல்கிற விஷயங்களை கரெக்ட்டா செஞ்சீங்கன்னா உலகமே பிரமிக்கும் ஒரு சூப்பர் எழுத்தாளரா நீங்க மாறலாம், அமேசான் பிரைம் வீடியோல உங்க கதைக்கு ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்பு செய்வதற்கான வாய்ப்பும் காத்துகிட்டு இருக்கு.

அட ஆமா சார் நம்புங்க! இந்த கதையோட உண்மையான ஹீரோவே நீங்க தான். அதனால தான் உங்க திறமைய வெளிப்படுத்துவதற்கு அமேசான் நிறுவனம் இந்த அமேசான் கே.டி.பி பென்-டு-பப்ளிஷ்(Amazon KDP Pen to Publish) போட்டியை அறிவிச்சிருக்காங்க.

அமேசான் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், அமேசான் நிறுவனத்தின் Kindle சேவையைப் பற்றியும் பலருக்கும் தெரிந்திருக்கும். Amazon Kindle இல் தான் இப்போ, இந்த வருடத்திற்கான அமேசான் கேடிபி பென் டு பப்ளிஷ் போட்டியை அறிவிச்சிருக்காங்க.

நீங்க உருவாக்க போகிற கதை ஏன் எழுத்து வடிவத்தில் இருக்க வேண்டியது கட்டாயம்னு இப்போ புரிஞ்சு இருக்கும் தானே. ஆன்லைனில் புத்தகங்களைப் படிப்பதற்கான ஒரு பிரத்தியேக தளம் தான் Kindle சேவை.

Kindle சேவையில் பயனர்களுக்கு ஏராளமான புத்தகங்கள், நாவல்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி தகவல்கள் என பல வகை e-புத்தகங்களால் நிரம்பி இருக்கிறது. ஆன்லைன் புத்தக எழுத்தாளர்களுக்கனே தனி இடம் மற்றும் அங்கீகாரம் இந்த தளத்தில் பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

உங்களுக்கு எழுத்து திறமை இருந்தால், நீங்களும் உலகம் விரும்பும் சிறந்த எழுத்தாளர் ஆகலாம். உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒரு அரிய வாய்ப்பை அமேசான் நிறுவனம் தற்பொழுது இந்த அமேசான் கே.டி.பி பென்-டு-பப்ளிஷ் போட்டியின் மூலம் உருவாக்கியுள்ளது.

இந்த கே.டி.பி பென்-டு-பப்ளிஷ் போட்டியில் பங்குபெற உங்களுக்கு எழுத்து திறமை இருந்தால் போதும், உங்களுடைய கதை, சிறு கதை, நாவல் அல்லது கவிதை எதுவாக இருந்தாலும், அதை நீங்கள் இந்த போட்டியில் சமர்ப்பிக்கலாம். கே.டி.பி பென்-டு-பப்ளிஷ் போட்டியின் வெற்றியாளர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.

புதிய எழுத்தாளர்களுக்கு இந்த கே.டி.பி பென்-டு-பப்ளிஷ் போட்டி நிச்சயம் ஒரு அங்கீகாரத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இரண்டாம் முறையாக இந்த அமேசான் கே.டி.பி பென்-டு-பப்ளிஷ் போட்டி தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் நடக்கவிருக்கிறது, இதற்கு முன்பு ஆங்கிலத்தில் மட்டும் இந்த போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்பொழுது தமிழக எழுத்தாளர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு பிடித்த எந்த பிரிவில் வேண்டுமானாலும் உங்களுடைய கதை, சிறுகதை அல்லது கவிதை படைப்பு இருக்கலாம். பா ராகவன் சி. சரவணகார்த்திகேயன் போன்ற பிரபலமான எழுத்தாளர்களின் அறிமுகங்களும் உங்களுக்குக் இந்த போட்டியின் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த போட்டியின் சிறப்பே, இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த கதைக்கு எதிர்பார்த்திடாத ஜாக்பாட் பரிசும் இருக்கிறது. அமேசான் கே.டி.பி பென்-டு-பப்ளிஷ் போட்டியில் தேர்வு செய்யப்படும் கதை உண்மையிலேயே சிறந்த படைப்பாக இருந்தால், அமேசான் பிரைம் வீடியோ மூலம் உங்கள் கதை ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்பாக மாற்றுவதற்கான வாய்ப்பையும் அமேசான் வழங்குகிறது.

இந்த போட்டியில் நீங்களும் பங்குபெற விரும்பினால், உங்கள் கதையைச் செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 14 ஆம் தேதிக்கு முன் சமர்பித்துவிடுங்கள். உங்கள் கதைகள் Long Form அல்லது Short Form என்ற இரண்டு பிரிவுகளுக்குள் இருக்க வேண்டும். உங்கள் கதை 10,000 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் Long Form பிரிவின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல் 2000 முதல் 10,000 வார்த்தைக்குள் இருக்கும் கதைகள் Short Form பிரிவின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும்.

உங்கள் கதைகளை PentoPublish2019 என்ற கீ-வேர்ட் சேர்த்து Kindle தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இத்துடன் ஐந்து கூடுதல் கீ-வேர்ட்களையும் உங்கள் கதைக்கு ஏற்றார் போல் கொடுத்துக்கொள்ளலாம். உங்களுடைய கதை இதற்கு முன்பு எங்கும் பதிவிடப்பட்டிருக்க கூடாது மற்றும் வேற்று மொழி கதைகளையும் மொழிபெயர்த்து இருக்க கூடாது என்பது முக்கிய விதி. உங்களுடைய படைப்பு, அசல் படைப்பாக இருக்க வேண்டும்.

• Long Form பிரிவின் கீழ் வெற்றி பெரும் வெற்றியாளருக்கு ரூ.5,00,000 பரிசாக வழங்கப்படும், அத்துடன் ஆன்சைட் விற்பனை மற்றும் பிரபல எழுத்தாளர்களுடைய குழு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

• இந்த பிரிவின் கீழ் வெற்றி பெரும் 2ஆம் போட்டியாளருக்கு ரூ.1,00,000 பரிசாக வழங்கப்படும், அத்துடன் ஆன்சைட் விற்பனை மற்றும் பிரபல எழுத்தாளர்களுடைய குழு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

• 3 ஆம் வெற்றியாளருக்கு ரூ.50,000 உடன் ஆன்சைட் விற்பனை மற்றும் பிரபல எழுத்தாளர்களுடைய குழு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

• தேர்வு செய்யப்படும் 31 இறுதிக்கட்ட போட்டியாளர்களில் 1 நுழைவு அமேசான் பிரைம் வீடியோ குழுவிற்குக் கொண்டு செல்லப்படும்.

• Short Form பிரிவின் கீழ் வெற்றி பெரும் வெற்றியாளருக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும், அத்துடன் ஆன்சைட் விற்பனை மற்றும் பிரபல எழுத்தாளர்களுடைய குழு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

• 2 ஆம் வெற்றியாளருக்கு ரூ.25,000 பரிசாக வழங்கப்படும், ஆன்சைட் விற்பனை மற்றும் பிரபல எழுத்தாளர்களுடைய குழு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

• 3 ஆம் வெற்றியாளருக்கு ரூ.10,000 பரிசும், ஆன்சைட் விற்பனை மற்றும் பிரபல எழுத்தாளர்களுடைய குழு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

இந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழ் எழுத்தாளர்களான விக்னேஷ் சி செல்வராஜ், பா.ராகவன், இரா. முருகன் மற்றும் ஜெயமோகன் போன்று உலகம் முழுதும் பிரபலமாகி, உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றி, வெற்றி நோக்கி முன்னேறி செல்லுங்கள். மேலும் கூடுதல் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த www.amazon.in/pentopublish வலைத்தளத்தை கிளிக் செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+