குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..திங்களன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை! சர்ப்ரைஸாக வந்த அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டத்துக்கு, வருகின்ற ஆகஸ்ட் 10 ம் தேதி திங்கள்கிழமை ஆடி திருவாதிரை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார். மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் - உடையார்பாளையம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

Ariyalur Declares Holiday for Schools

தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அரசு விழாவக நடத்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டிற்கான மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழா 10.08.2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இதனால், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு, வருகின்ற 10.08.2026 (திங்கட்கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளுர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், அன்றையதினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத் தேர்வுகள், அரசுப்பணியாளர் தேர்வுகள் மற்றும் பிற போட்டித் தேர்வுகள், சம்மந்தப்பட்ட தேர்வு நடத்தும் அமைப்புகள் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல நடைபெறும்.

மேலும், 10.08.2026 (திங்கட்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஈடாக 22.08.2026 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த உள்ளுர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881) -ன் கீழ் அறிவிக்கப்படாததால், அரியலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+