கோயம்பேடு மட்டுமல்ல.. வேறு ஒரு காரணமும் உள்ளது.. அரியலூரில் 188 கேஸ்கள் வந்தது எப்படி? பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: தமிழகத்தில் மிக சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 188 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியது எப்படி.. முழு பின்னணி!

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து இதுதான் மிக மோசமான அதிகமான தொற்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! குறிப்பிடத்தக்கது.

    அதிகபட்சமாக சென்னையில் 324 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு 2328 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அரியலூரில் 188, கடலூரில் 95, காஞ்சிபுரத்தில் 45, திருவள்ளூரில் 34, திருவண்ணாமலையில் 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் நிலை

    அரியலூர் நிலை

    இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 188 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரியலூரில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 6 பேர் மட்டுமே குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 216 ஆக உள்ளது. ஆனால் அரியலூரில் இப்படி கேஸ்கள் அதிகமாக ஏற்பட கோயம்பேடு மட்டும் காரணம் கிடையாது. அங்கு கேஸ்கள் அதிகரிக்க வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

    கடந்த மாதம் எப்படி?

    கடந்த மாதம் எப்படி?

    அரியலூரில் கடந்த மாதம் வரை 22 கேஸ்கள்தான் இருந்தது. அதன்படி கடந்த மாதம் 30ம் தேதி முதல் நபருக்கு அங்கு கோயம்பேடு மூலம் கொரோனா வந்தது. நமங்குணம் என்று கிராமத்தை சேர்ந்த அவர், லாரியில் கோயம்பேட்டில் இருந்து அரியலூரில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார். அவருக்கு 30ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருடன் அவரைப்போலவே 850 பேர் அரியலூருக்கு வந்து இருக்கிறார்கள். இவர்களில் 750 பேர் வரை கண்டுபிடிக்கப்பட்டனர்.

    ஒரே நாள் கேஸ்கள்

    ஒரே நாள் கேஸ்கள்

    இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு உடனே சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இடவசதி கருதி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு சோதனை செய்ததில் மூன்று நாட்களுக்கு முன் 20 பேருக்கும் அதற்கு அடுத்து 36 பேருக்கும் கொரோனா வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே அடியாக அரியலூரில் 188 கேஸ்கள் பதிவானது. அந்த மாவட்டத்தை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    காண்டாக்ட் கேஸ்கள்

    காண்டாக்ட் கேஸ்கள்

    அரியலூரில் நேற்று வந்த 188 கேஸ்களில் 100+ கேஸ்கள் நேரடியாக கோயம்பேடு சென்று வந்தவர்கள். இன்னும் சிலர் அவர்களின் உறவினர்கள். அதாவது கோயம்பேடு சென்று வந்தவர்களின் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தை, பெற்றோர்கள். இதன் மூலம் கோயம்பேடு காரணமாக மிக தீவிரமான ஸ்டேஜ் 2 பரவல் அங்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு வகையில் கட்டுப்படுத்த கூடியதுதான்.

    இன்னொரு வகை என்ன ?

    இன்னொரு வகை என்ன ?

    அதேபோல் அரியலூரில் இன்னொரு வகையிலும் கொரோனா பரவி உள்ளது. அரியலூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ பயிற்சி குழு ஒன்று ஹைதராபாதத்தில் இருந்து வந்துள்ளது. ஹைதராபாத்தில் பயிற்சி எடுத்த மூன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பெண் மருத்துவ பணியாளர் நான்கு பேரும் அரியலூர் வந்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து சென்னை வழியாக இவர்கள் வந்துள்ளனர்.

    மிக மோசம்

    மிக மோசம்

    இடையில் இவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இதனால் இவர்களுக்கு ஹைதராபாத்தில் இருந்தே கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இவர்கள் அரியலூர் வந்து தங்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் நான்கு பேர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் என்று மொத்தம் 26 பேருக்கு இவர்களால் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் பழகிய இன்னும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மொத்தமாக மூடப்பட்டது

    மொத்தமாக மூடப்பட்டது

    இவர்கள் எல்லோரும் ஆண்டிமடம், அருளாண்டபுரம், உடையார்பாளையம் கீழவேலி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள். இதனால் மொத்தமாக இவர்கள் இருந்த கிராமங்கள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் இவர்கள் மூலம் வேறு சிலருக்கு கொரோனா பரவி இருக்கலாம். அதற்கான முடிவுகள் இன்று வரும் என்று கூறுகிறார்கள். இதனால் அரியலூர் மாவட்டம் பெரும் அச்சத்தில் உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+