மாற்றம் வேணும் விஜய்.. முதல்வரிடம் உடைத்து பேசிய பிரேமலதா.. அடுத்த ட்விஸ்ட்
அரியலூர்: தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அரசியலி்ல் பெரும் மாற்றம் நடந்துள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவிடம் பொது மக்கள், மரசியல் கட்சிகள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்போதும் தேர்தல் பிரச்சாரத்தை போலவே பேசுவதாக விமர்சனம் உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் விஜயை சந்தித்து வெளிப்படையாகவே சொல்லிவிட்டதாக பிரேமலதா கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றம் என்று சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நீங்கள் மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள். மானிய கோரிக்கையில் மக்களுக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது என்பதை சொல்ல வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதையெல்லாம் பேசாமல் இனி சர்க்காரியா கமிஷன் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

விஜயிடம் ஓபனாக பேசிய பிரேமலதா
இதை நான் சட்டசபையிலேயே பேசியுள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் முதலமைச்சரை சந்தித்தேன். என் தம்பி மகள் திருமண விழா அழைப்பிதழ் கொடுத்தபோதும், இதை அவரிடம் பேசினேன். பர்ஸ்னெலாக, மிகவும் உரிமையோடு இதை சொல்லியுள்ளேன். மாற்றம் என்று சொல்லி ஒரு ஆட்சி வந்துள்ளது. மக்கள் மிகவும் நம்புகிறார்கள். சட்டசபை நேரலையை அதிகம் பார்க்கிறார்கள். இந்த அரசு என்ன அறிவிக்க போகிறது என்பதை எல்லாரும் பார்க்கிறார்கள்.
அதற்கு முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திவிட்டு தான் வந்துள்ளேன். தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது என்று அனைவரும் சொல்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாக போகிறது. மாற்றம் என்று தான் வந்தார்கள். நானே எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியாது. சட்டசபையில், முதலமைச்சரை சந்திக்கும்போதும் நானே பேசகிறேன். உண்மையில் இது எல்லாருக்குமே தெரியும். ஓட்டு போட்ட மக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் பதில் சொல்லி எதுவுமில்லை.
மாற்றம் வேண்டும்
இந்த அரசு உண்மையில் மாற்றம் கொடுத்துள்ளதா, உண்மையில் நல்லாட்சியா என்பதை வாக்களித்த மக்களே கூற வேண்டும். ஒன்று, இரண்டல்ல எல்லாவற்றிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மின்சாரம், விலைவாசி உயர்வு, மழை வெள்ளம், விவசாயிகள் பாதிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நேற்று கூட விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். உடனடியாக களத்தில் சென்று பார்வையிட்டோம். எல்லா துறையிலும் மாற்றம், முன்னேற்றம் வரவேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள்" என்றார். பிரேமலதாவின் கருத்தால் அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
