நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இதுதான்.. பிரதமரிடமும் சொல்லிவிட்டு வந்தேன்.. உதயநிதி ஸ்டாலின்!
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரியலூர்: தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பறிக்கப்படும் போது, தைரியமாக குரல் கொடுப்பதே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல், நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடமும் கூறிவிட்டு வந்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், முதல்முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார் அதன்படி இன்று அவரை சந்தித்தேன் எனத் தெரிவித்தார்.

பிரதமருடன் உதயநிதி சந்திப்பு
அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்டபோது பிரதமர் மோடி சில விளக்கங்களைத் தந்தார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் தெரிவித்தேன் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில் அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு துறைகள் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடியில் நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நீட் ரத்து ரகசியம்
இதனிடையே, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த புதிய அரசு மருத்துவமனையை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் நீட் தேர்வு ரத்து ரகசியம் பற்றி பேசுகிறார். அதில் எந்த ரகசியமும் இல்லை. தைரியமாக எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுப்பதே ரகசியம்.

பிரதமரிடமும் கூறினேன்
இனி அனிதாவின் பெயரில் அமைக்கப்பட்ட அரங்கை பார்க்கும் போதெல்லாம் நீட் தேர்வு ரத்து தான் மனதில் ஓடும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் எந்தவித சமரசமும் இன்றி தொடரும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு பல்வேறு விளக்கங்களை அவர் கொடுத்தார். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடமும் கூறிவிட்டு வந்தேன் என்று தெரிவித்தார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications