Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி தமிழ்நாடு பயணம் LIVE: ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் - மோடி

Subscribe to Oneindia Tamil

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி சோழபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் மோடி. அப்போது பேசிய மோடி, தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். மாலத்தீவிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

PM Modi Gangaikonda  Cholapuram

பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு திருச்சி வந்த அவர், தனியார் ஓட்டலில் ஒய்வெடுத்திருந்தார். இதனையடுத்து இன்று காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.50 மணியளவில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மக்களை சந்திக்கும் மோடி, பின்னர் கோயிலுக்கு செல்கிறார். பெருவுடையார் கோயிலின் வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

Jul 27, 2025, 4:48 pm IST

இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று பிற்பகல் 4.40 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
Jul 27, 2025, 4:47 pm IST

ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சோழகங்கம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற மோடி, திருச்சியில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடி ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவை முடித்துவிட்டு மதியம் 1.45 மணிக்கே புறப்படுவதாக இருந்தது. ஆனால் கூறியதைவிட அதிக நேரம் செலவிட்டுள்ளார் அதாவது 3.45 மணியளவில் தான் கிளம்பினார் பிரதமர் மோடி.
Jul 27, 2025, 3:41 pm IST

ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சோழகங்கம் வந்தடைந்தார். இங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார் பிரதமர் மோடி.
Jul 27, 2025, 3:35 pm IST

ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்றுவிட்டு சோழகங்கம் நோக்கி புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி. சாலையின் இருபுறமும் குவிந்துள்ள பாஜக தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி செல்கிறார் மோடி.
Jul 27, 2025, 3:20 pm IST

தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் - பிரதமர் மோடி
Jul 27, 2025, 3:20 pm IST

புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழ ராஜ்ஜியம் - மோடி
Jul 27, 2025, 3:20 pm IST

பாரதத்தின் வலிமையை உணர்த்தியது ஆபரேஷன் சிந்தூர் - மோடி
Jul 27, 2025, 3:20 pm IST

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் உதாரணம் - மோடி
Jul 27, 2025, 3:20 pm IST

நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள் - மோடி
Jul 27, 2025, 3:07 pm IST

ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி - பிரதமர் மோடி
Jul 27, 2025, 3:07 pm IST

சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம் - மோடி
Jul 27, 2025, 3:07 pm IST

சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம் - பிரதமர் மோடி
Jul 27, 2025, 2:45 pm IST

இந்தியாவின் 140 கோடி மக்களுக்காகவும் இன்று பிரார்த்தனை - பிரதமர் மோடி
Jul 27, 2025, 2:45 pm IST

சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன் - பிரதமர் மோடி
Jul 27, 2025, 2:45 pm IST

அனைவரும் இந்த கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் - மோடி
Jul 27, 2025, 2:45 pm IST

வணக்கம் சோழ மண்டலம்.. நமச்சிவாய வாழ்க.. நாதன் தாழ் வாழ்க.. - பிரதமர் மோடி
Jul 27, 2025, 2:45 pm IST

இது ராஜராஜ சோழனின் மண், காசியின் பிரதிநிதியான சிவ ஹோசம் புல்லரிப்பை தருகின்றது - மோடி
Jul 27, 2025, 2:45 pm IST

இளையராஜாவின் இசை ஓர் ஆன்மிக அனுபவம் - பிரதமர் மோடி
Jul 27, 2025, 2:34 pm IST

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு
Jul 27, 2025, 2:34 pm IST

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
Jul 27, 2025, 2:34 pm IST

ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியீடு
Jul 27, 2025, 2:34 pm IST

முதலாம் ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரை விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர், சோழர் பெருமையை நாடாளுமன்றத்தில் நிறுவியவர் பிரதமர் மோடி என்றும், உலகம் முழுவதும் வள்ளுவரை கொண்டு செல்பவரும் மோடி என்று பேசினார்.
Jul 27, 2025, 2:22 pm IST

ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் சோழருக்கு இசைஞானி இளையராஜா இசை மரியாதை செலுத்தி வருகிறார். ஓம் சிவஹோம் பாடலை இசையமைத்த இளையராஜா குழுவினருக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தார்.
Jul 27, 2025, 2:03 pm IST

முப்பெரும் விழாவில் சோழருக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை மரியாதை
Jul 27, 2025, 2:03 pm IST

பிரதமர் மோடி முன்னிலையில் இளையராஜா இசையில் ஓம் சிவஹோம் பாடல் இசைக்கப்பட்டு வருகிறது
Jul 27, 2025, 1:52 pm IST

கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் மோடி பங்கேற்பு
Jul 27, 2025, 1:52 pm IST

ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
Jul 27, 2025, 1:52 pm IST

விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
Jul 27, 2025, 1:52 pm IST

தொகுதி எம்பி என்ற பெயரில் விசிக எம்பி தொல் திருமாவளவன் பங்கேற்பு
Jul 27, 2025, 1:42 pm IST

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சோழீஸ்வரரை வழிபட்ட பிரதமர் மோடி, துர்க்கை அம்மன் கோவிலில் 20 நிமிடங்கள் தியானம் செய்தார்.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+