பிரதமர் மோடி ரோடு ஷோ.. வழிநெடுக பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு.. களைகட்டிய திருச்சி - அரியலூர்
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றக உள்ளார். இந்த விழாவுக்காக புறப்பட்ட பிரதமர் மோடி திருச்சியில் 8 கிலோமீட்டர் தூரம் ரோடுஷோ நடத்தினார். பொதுமக்கள் மலர்தூவி அவரை வரவேற்றனர். அதன்பிறகு அரியலூர் மாவட்டத்தில் 3 கிலோமீட்டர் தூரம் ரோடுஷோ மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து நேரடியாக நேற்று அவர் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.

அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிச்சாமி அவரை சந்தித்தார். அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் அதுதொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் யார்டு மாரியாட் ஹோட்டலில் இரவு தங்கி ஓய்வு எடுத்தார். இன்று காலையில் 11:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக இன்று காலை காரில் விமான நிலையம் செல்லும்போது, கோர்ட்டு யார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார்.
பிரதமர் மோடி காரில் இருந்தபடி மக்களை நோக்கி கையசைத்தார். மலர்தூவி வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்றனர். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார். பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் பிரதமர் மோடி அங்கிருந்து பிரகதீஸ்வரர் கோவில் வரை 3 கிலோமீட்டர் தூரம் வரை காரில் ரோடு ஷோ சென்று வருகிறார். சாலையின் இருபுறங்களிலும் நின்று பொதுமக்கள் மலர்தூவி வரவேற்று வருகின்றனர். அதன்பிறகு பிரகதீஸ்வரர் கோவிலில் பெருவுடையாரை பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார்.
கோவிலின் பிற சந்ததிகளிலும் தரிசனம் செய்கிறார். அங்கு கண்காட்சியையும் பார்வையிட்டு, மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிடுகிறார்.
இந்த விழாவை முடித்த பிறகு பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications