பட்டியலின நபரை காலில் விழ வைத்த சம்பவம்.. திமுக நிர்வாகி தலைமறைவு .. அரியலூரில் அதிர்ச்சி
அரியலூர்: பட்டியலின நபரை காலில் விழ வைத்த விவகாரத்தில் திமுக நிர்வாகி ஒருவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் வாளரகுறிச்சியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி அன்பரசன். இவர் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதையொட்டி வேறு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அடுத்த நாளே மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு அன்பரசனின் சகோதரர் திருநாவுக்கரசர் சென்றுள்ளார். அப்போது பட்டாசு வெடித்தது குறித்து கேட்டு அச்சமூகத்தினர் தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது ஊர் மக்கள் முன்பு திருநாவுக்கரசுவை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக தெரிகிறது. இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ராஜேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் திமுக நிர்வாகி கண்ணன் உள்பட மேலும் 5 பேரை இரு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications