நல்ல போதை.. பைக்கிலிருந்து மகன் விழுந்தது கூட தெரியாமல் ஓட்டிக் கொண்டு போன கொடுமைக்கார தந்தை!
போதையில் தந்தை பைக் ஓட்டியதால் 4 வயது குழந்தை தவறி விழுந்தது
அரியலூர்: பைக்கில் இருந்த மகன், கீழே விழுந்தது கூட தெரியாமல் போதையில் பைக் ஓட்டி கொண்டே சென்றிருக்கிறார் பெற்ற தந்தை.. இதை பார்த்ததும் அரியலூர் மக்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள திருமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்... இவருடைய சொந்தக்காரர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.. அதனால் துக்க வீட்டில் காரியம் நடந்தது.. அந்த துக்க நிகழ்ச்சிக்கு மகனை அழைத்து கொண்டு சென்றார்... மகன் பெயர் அன்பு.. 5 வயதாகிறது.

துக்கம் விசாரிக்க போனவருக்கு ஓவர் துக்கம் வந்துவிட்டது போலும்.. மூக்கு மூட்ட அங்கேயே தண்ணி அடித்தார்.. போதை தலைக்கேறியதும், பைக் எடுத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.
வண்டியின் முன் பக்கம் மகனை உட்கார வைத்து கொண்டு ஓட்டினார்.. ஆனால் சுத்தமாக பைக்கை பேலன்ஸ் செய்து ஓட்ட முடியவில்லை.. புதுச்சாவடி அருகே வந்தபோது, பைக் டேங்க் மீது உட்கார்ந்திருந்த அன்பு அலேக்காக வழுக்கி கொண்டு கீழே விழுந்துவிட்டான். ஆனால் அவன் விழுந்தது கூட தெரியமல் செல்வம் பைக்கை ஓட்டிக் கொண்டே போனார்.
அன்பு கீழே வேகமாக விழுந்ததில் அவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.. ரத்தம் கொட்டி, மயக்கமாகி ரோட்டோரம் விழுந்துவிட்டான்.. இதை பார்த்ததும் பொதுமக்கள் பதறி விட்டனர்... குழந்தையை உடனடியாக மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பைக்கில் பின்பக்கம் உட்கார்ந்திருந்தால்கூட மகன் விழுந்தது தெரியாமல் போயிருக்கலாம்.. ஆனால் பைக்கில் டேங்க் மீது இரு கைகளின் பிடியில் இருந்து நழுவி விழுந்தது தெரியாமல் போனதுதான் அதிர்ச்சியாக உள்ளது.. அப்படியே பைக்கை ஓட்டி கொண்டு போன செல்வம், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அங்கிருந்த முட்புதருக்குள் விழுந்து விட்டாராம்.
வீட்டிற்கு இன்னும் செல்வம் வந்து சேரவில்லையே என்று அவரை தேடி வந்தபோதுதான் முள்செடியில் விழுந்து கிடந்ததைகண்டு பிடித்துள்ளனர்.. பிறகு அவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. மகனை கீழே தவறவிட்டதும் இல்லாமல், நேராக முள்புதரில் போய் குடிகார தந்தை கவிழ்ந்து விழுந்த சம்பவம், அந்த பகுதி மக்களுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications