கட்டி வைத்து.. காதில் பூச்சி கொல்லி மருந்தை ஊற்றி.. துடித்தே இறந்த கணவர்.. சுகுணாவின் ஷாக் செயல்!

கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: கணவனை கட்டி வைத்து, காதில் பூச்சி கொல்லி மருந்தை ஊற்றிவிட்டார் மனைவி சுகுணா.. இதில் வலி தாங்க முடியாமல் அலறியே துடிதுடித்து இறந்துவிட்டார் கணவன்! இந்த சம்பவம் ஜெயங்கொண்டத்தில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது இலையூர் மேலவெளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ராஜசேகர்.. சேகர் என்று மற்றொரு பெயரும் உண்டு.. 50 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர். மனைவி பெயர் சுகுணா.. அவருக்கு 40 வயதாகிறது.. ரவிவர்மன் என்று 23 வயதில் மகன் உள்ளார்.. இவர்களுடன் சேகரின் அம்மாவும் தங்கி உள்ளார்.

Wife killed husband near ariyalur

சேகருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.. அதனால் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் சுகுணாவிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்வாராம்.. இந்நிலையில், 3நாளைக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

ஆனால், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார் சேகர்.. அதேபோல, சுகுணாவிடம் சண்டைக்கு போனார்.. மகனையும், அம்மாவையும் திட்டி தகராறு செய்தார்.. கல்யாணம் ஆனது முதலே சேகரின் தொல்லையை பொறுத்து பொறுத்த வந்த சுகுணாவும், குடும்பத்தினரும் சேகரை கொன்றுவிடலாம் என முடிவு செய்தனர்.

அதனால் ராஜசேகரை கட்டிப்போட்டனர்.. மனைவி, மகன், தாய், 3 பேரும் சேர்ந்து சேகரின் காதில் பூச்சி கொல்லை மருந்தை ஊற்றினர்.. அப்போது வலி தாங்க முடியாமல் சேகர் துடித்துள்ளார்.. சற்று நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது..

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சுகுணா, அம்மா செல்வி, மகன் ரவிவர்மன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகிறார்கள்.. கணவனை கட்டி போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+