தவறி விழுந்த மகன் தொப்பி.. ராட்சதமுதலையிடம் ரிஸ்க் எடுத்த தந்தை.. பதற வைக்கும் வீடியோ
மகனின் தொப்பியை முதலையிடம் இருந்து தந்தை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நதிப்பாலத்தில் விழுந்த மகனின் தொப்பியை முதலையிடன் இருந்து மீட்க தந்தை ஒருவர் ரிஸ்க் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
கொட்டும் அருவிகள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், பண்டைய காலத்தில் செத்துக்கப்பட்ட அழகிய பாறைகள் என இயற்கை அழகை மனிதன் அனுபவிக்க மிகச் சிறந்த இடங்களில் ஒன்று தான் ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள காஹில்ஸ் கிராசிங் எனும் தரைப்பாலம். கக்கடு தேசிய பூங்காவில் ஒரு நதியின் குறுக்கே அமைந்துள்ளது இப்பாலம்.
இந்தப் பகுதியில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த நதியில் முதலைகள் மிக அதிகம். இந்த பகுதிக்கு சுற்றுலா வருவோர் தரையில் இருந்தபடியே நதியில் முதலைகள் மிதந்து போவதை பார்க்க முடியும். எனவே தான் இந்நதியை முதலை நதி என்றே அழைக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் பலர் வார இறுதி நாட்களில் காஹில்ஸ் கிராசிங் சென்று மீன் பிடித்தும், முதலைகளை பார்த்தும் பரவசமடைக்கின்றனர்.
அப்படி காஹில்ஸ் கிராசிங் பாலத்திற்கு சுற்றுலா சென்ற ஒரு தந்தையும் மகனும், முதலையிடம் இருந்து தங்களுடைய தொப்பியை எடுக்க உயிரை பணயம் வைத்து போராடும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.

தூண்டிலில் சிக்கிய மீன்
அந்த வீடியோவில் ஸ்காட் ராஸ்கரேல் என்பவர் தனது மகனுடம் காஹில்ஸ் கிராசிங் பாலத்தில் தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள முதலை நீரில் தென்படுகிறது. பின்னர் அது தூண்டிலில் சிக்கிய மீனை பின் தொடர்ந்து செல்கிறது.

பின் தொடரும் முதலை
முதலில் நதியில் இருந்தபடியே மீன்களை பின்தொடர்ந்துகொண்டிருந்த முதலை ஒருகட்டத்தில் தரைப்பாலத்தின் மீது ஏறுகிறது. தூண்டிலில் மாட்டிய மீனுடன் ஸ்காட்டின் மகன் பின்னால் நகர்ந்து செல்கிறார். முதலையும் மீனைப் பிடிப்பதற்காக அவரை பின்தொடர்கிறது. அப்போது அவருடைய தொப்பி கீழே விழுந்துவிடுகிறது.

பதற வைக்கும் வீடியோ
இதை கவனித்த ஸ்காட், தனது மகனின் தொப்பியை எடுக்க முதலையின் அருகே செல்கிறார். அவரது மகன் தொப்பி வேண்டாம் என சொல்லியும் கேட்காத ஸ்காட், துணிந்து சென்று முதலைக்கு அருகில் கிடக்கும் அந்த தொப்பியை எடுக்கிறார். பதற வைக்கும் இந்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

தொப்பியா முக்கியம்?
ஒரு தொப்பிக்காக உயிரை பணயம் வைத்து, இத்தனை ரிஸ்க் எடுத்து முதலையிடம் செல்ல வேண்டுமா என நெட்டிசன்கள் ஸ்காட்டை கடிந்து கொண்டுள்ளனர். "வீட்டில் 15 தொப்பிகள் இருக்கிறது. எனக்கு ஒரு தந்தை தான் இருக்கிறீர்கள். தொப்பி போனால் போகட்டும்" என மகன் சொல்லியும் ஸ்காட் கேட்காதது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications