பெங்களூரில் கெம்பே கவுடா சிலையை திறக்கும் மோடி.. ஒக்கலிகா ஓட்டு மொத்தமாக பாஜகவுக்கு போகுமா?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ரூ5,000 கோடி செலவில் கட்டப்பட்ட 2-ம் முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். மேலும் பெங்களூர் நகரை நிர்மாணித்த கெம்பே கவுடாவின் 108 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. அதேநேரத்தில் பாஜகவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் முயற்சிக்கின்றன.

ஜாதிய வாக்குகள்
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ஜாதிய வாக்குகள்தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கின்றன. கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களாக இருப்பவை ஒக்கலிகா கவுடா மற்றும் லிங்காயத்துகள். இதில் லிங்காயத்துகள் பொதுவாகவே பாஜக ஆதரவு வாக்கு வங்கியாக இருக்கின்றன. ஒக்கலிகாக கவுடாவின் வாக்குகள் ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இருந்த போதும் காங்கிரஸ் கட்சிக்குதான் இப்போதைய நிலவரப்படி ஒக்கலிகா கவுடாக்களின் ஆதரவு அமோக இருக்கிறது.

பெங்களூர் ஏர்போர்ட் 2-வது முனையம்
இந்த களநிலவரத்தை தலைகீழாக மாற்ற முயற்சிக்கிறது பாஜக. அதனால்தான் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் போற்றுதலுக்குரிய ஆளுமையான கெம்பே கவுடா சிலையை கையில் எடுத்திருக்கிறது பாஜக. கெம்பே கவுடா சிலையை மட்டும் திறக்காமல் கெம்பே கவுடா பெயரிலான சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை பிரதமர் மோடி மூலம் திறக்க இருக்கிறது. பெங்களூரு கெம்பபேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது 2-வது முனையம். ஆண்டுக்கு தற்போது 2.5 கோடி பயணிகள் கையாளப்படும் நிலையில், இந்தப் புதிய முனையம் மூலம், 5 முதல் 6 கோடி பயணிகள் வரை கையாள முடியும்.

2-வது முனையம் என்ன சிறப்புகள்?
மேலும் தோட்டநகரம் என்றழைக்கப்படும் பெங்களூருவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோட்டத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் உணர்வார்கள். பசுமை சுவர்கள், தொங்கு தோட்டங்கள் மற்றும் வெளிப்புறத் தோட்டங்கள் என 10,000 சதுர மீட்டருக்கும் மேலான பரப்பளவைப் பயணிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். இந்த விமான நிலையத்தில் ஏற்கனவே 100 சதவீத அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட நீடித்த கொள்கைகளுடன் 2-வது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. நீடித்த செயல்பாட்டு முயற்சிகளின் அடிப்படையில், 2-வது முனையம் உலகின் மிகப்பெரிய முனையமாக இருக்கும். அமெரிக்க ஜி.பி.சி (பசுமை கட்டிடக் குழு) தனது செயல்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக, சான்றளிக்கப்பட்ட பிளாட்டினம் மதிப்பீடாக இந்த முனையம் இருக்கும். 2-வது முனையத்திற்கான அனைத்து கலை வேலைபாடுகளையும் "நௌரசா" என்ற கருப்பொருள் ஒன்றிணைக்கிறது. கர்நாடகாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் இந்த வேலைபாடுகள் இந்தியர்களின் நெறிகளையும் பிரதிபலிக்கிறது.

கெம்பே கவுடா சிலை
அத்துடன் பெங்களூருவில் நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். பெங்களூரு நகர நிறுவனரும், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவருமான நடபிரபு கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவு கூரும் விதமாக இது கட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலையை வடிவமைத்த ராம் வி சதர் 98 டன் வெண்கலம் மற்றும் 120 டன் எஃகு ஆகியவற்றுடன் இதனை உருவாக்கியுள்ளார்.

வாக்கு வங்கி அரசியல்
இப்போது கெம்பே கவுடா சிலையை முன்வைத்து கர்நாடகாவில் அரசியல் களைகட்டி இருக்கிறது. பெங்களூர் விமான நிலையம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிலையில் கெம்பே கவுடாவுக்கு மாநில அரசு ஏன் சிலைக்கான பணத்தை செலவிட வேண்டும் என்கிறது காங்கிரஸ். இக்கேள்வியை எழுப்பி இருக்கும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார், ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பாஜகவோ, ஒட்டுமொத்த ஒக்கலிகா ஓட்டும் பாஜகவுக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் காங்கிரஸ் அச்சப்படுகிறது என சாடுகிறது. இருந்தபோதும் களநிலவரங்களோ, பாஜக என்னதான் தலைகீழாக நின்றாலும் ஒக்கலிகா வாக்குகளை அவ்வளவு எளிதில் ஈர்த்துவிட முடியாது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications