பாத்ரூமில் ஓட்டை.. யாரந்த "மூன்றாவது கண்".. அலறியடித்து ஓடிய மாணவிகள்.. வசமாக சிக்கியது யார் பாருங்க
பாத்ரூம் சுவற்றில் கேமராவை வைத்து வீடியோ எடுத்துள்ளார் மாணவர்
பெங்களூரு: இளைஞர் ஒருவரின் செல்போனில் 1200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்து உள்ளனர்.. இதனால், பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகெரேஹள்ளி என்ற பகுதியில் தனியார் காலேஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது..
இது ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி ஆகும்.. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த காலேஜில் உள்ள பாத்ரூமுக்குள் மாணவிகள் சென்றிருக்கிறார்கள்..

மூன்றாவது கண்
அப்போது அந்த மாணவிகளின் கழிவறையில், ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.. அவரை பார்த்துமே, அதிர்ச்சி அடைந்த மாணவிகள், அலறி அடித்து கொண்டு, கூச்சலிட்டவாறே வெளியே வந்தனர்.. மாணவிகள் சத்தம் போடவும், அந்த இளைஞர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்... இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கிரிநகர் போலீசில் புகார் தரப்பட்டது.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. மேலும் அந்த காலேஜில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

உளறல்
அப்போது பெண்களின் கழிவறைக்குள் இருந்து ஓடியது, அதே காலேஜில் படிக்கும் சுபம் ஆசாத் என்பது தெரியவந்தது.. இவர், அங்கு 3-ம் ஆண்டு பிபிஏ படிக்கும் மாணவராம்.. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்... ஆனால் அவர் தன் குற்றத்தை உடனே ஒப்புக்கொள்ளவில்லை.. முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை ஸ்டேஷனுக்கே அழைத்து சென்று தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் நடந்த சம்பவத்தை முழுமையாக ஒப்புக் கொண்டார்.

பாத்ரூம் ஓட்டை
மாணவிகளின் பாத்ரூமில், ரகசிய கேமரா பொருத்தி வைத்ததையும், அந்த கேமரா மூலம் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததையும் வாக்குமூலமாக அந்த மாணவர் சொன்னார்.. இதனால் அந்த காலேஜுக்கு சென்ற போலீசார் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை பறிமுதல் செய்தனர்... அத்துடன், சுபம் ஆசாத்தின் செல்போனும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.. அந்த செல்போனை பார்த்ததுமே போலீசார் அதிர்ந்துவிட்டனர்..

பாத்ரூம் ஓட்டை
காரணம், 1,200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் அந்த செல்போனில் நிறைந்திருந்தன.. கைதான சுபம் ஆசாத் மீது கிரிநகர் போலீசார் வழக்கை பதிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து சுபம் ஆசாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்... இதுபோல ஏற்கனவே சுபம் ஆசாத் மீது காலேஜ் நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றதாம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, இந்த பாத்ரூமில் துளையிட்ட பகுதியில், யாருக்கும் தெரியாமல் கேமராவையே மறைத்து வைத்திருந்தாராம்..

1200 வீடியோஸ்
இதையும் மாணவிகள் கண்டுபிடித்து, கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி உள்ளார்கள்.. இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று சுபம் ஆபாத் மன்னிப்பு கேட்டதால், அவர் மீது புகார் எதுவும் அளிக்கப்படவில்லையாம். இப்போது மறுபடியும் செல்போனை மறைத்து வைத்து, ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.. 1200 வீடியோக்கள் உள்ளதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராவது இதில் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடக்கிறது..!
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications