Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. மொத்தம் 17 பேர்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பமாக தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூர்: கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பமாக தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    கடந்த செவ்வாய் கிழமை கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி கலைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி கலைந்தது.

    13 காங்கிரஸ் மற்றும் 3 மஜத எம்எல்ஏக்கள் உட்பட 16 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த கடிதம் அளித்ததை அடுத்து ஆட்சி கலைந்தது.

    ஆட்சி மாற்றம்

    ஆட்சி மாற்றம்

    இதையடுத்து கர்நாடகாவில் இன்று எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்றார். இதனால் கர்நாடக அரசியலில் நிறைய அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது.

    தகுதி நீக்கம்

    தகுதி நீக்கம்

    அதன் ஒரு கட்டமாக கடந்த வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோரை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். மீதமுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    நீக்கப்பட்டனர்

    நீக்கப்பட்டனர்

    அதன்படி தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மொத்தமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 பேர் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 3 பேர் மற்றும் சுயேச்சை ஒருவர்இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தற்போது தகுதி நீக்க எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    யார் அவர்

    யார் அவர்

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர்தான் அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து இருந்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரையும், இன்னொரு சுயேட்சை எம்எல்ஏவையும்தற்போது தகுதி நீக்கம் செய்துள்ளதால் தகுதி நீக்க எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    முடியவே முடியாது

    முடியவே முடியாது

    கட்சி தாவல் தடை சட்டத்தை இவர்கள் மீறிவிட்டதாக கூறி இவர்களை தகுதி நீக்கம் செய்தார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல் அடுத்த கர்நாடக சட்டசபை தேர்தல் வரை இவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இடைத்தேர்தல் எதிலும் 17 பேரும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+