நீட் தேர்வால் அதிர்ஷ்டம்.. டாக்டராகும் 19 வயது புலம்பெயர் தொழிலாளி.. முதல் முயற்சியிலேயே வெற்றி
பெங்களூர்: பிளஸ் 2 முடித்து பெங்களூரில் கட்டுமான பணிக்கு வந்திருந்த ஒடிசாவை சேர்ந்த 19 வயது பழங்குடியின மாணவன் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் பாஸாகி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளான். நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தது கூட தெரியாமல் பெங்களூரில் பணியாற்றி வந்த அந்த ஏழை பழங்குடியின மாணவனுக்கு அவரது ஆசிரியர் போன் செய்து நீட் தேர்வில் பாஸாகி விட்டதாக கூறியபோது மாணவன் ஆனந்த் கண்ணீர் சிந்தினார்.
‛நீட்' தேர்வு.. மருத்துவ படிப்பை பயில விரும்பும் அனைவருக்கும் இந்த தேர்வு கட்டாயம். நீட் தேர்வில் பாஸானால் தான் மருத்துவம் படிக்க முடியும். இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏழை, எளிய மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு கடினமாக உள்ளது. இதனால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு வழி கொடுக்க வேண்டும். நீட் தேர்வு தேவையில்லை என்று தமிழகத்தை ஆளும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே தான் ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த 19 வயது மாணவர் புலம்பெயர்ந்து பெங்களூரில் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிலையில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். அதுபற்றிய தகவல் வருமாறு:
ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டம் பன்பூர் பிளாக்கிற்குட்பட்ட முதுலிதியா கிராமத்தை சேர்ந்தவர் சகாதேப் . இவரது மனைவி பெயர் ரங்கி. இவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இந்த தம்பதியின் மகன் உள்ளார். அவரது பெயர் சுபம் சாபர். அவருக்கு 19 வயது ஆகிறது. சமீபத்தில் தான் பிளஸ் 2 படிப்பை முடித்தார். இதையடுத்து அவர் டாக்டர் ஆகும் கனவோடு நீட் தேர்வு எழுதினார்.
நீட் தேர்வு எழுதி முடித்த பிறகு சுபம் சாபர் பெங்களூருவுக்கு புலம்பெயர் தொழிலாளியாக வந்தார். கட்டுமான பணியில் ஈடுபட்டார். சுபம் சாபரின் குடும்பம் ஏழையானது. இதனால் வேறு வழியின்றி அவர் பெங்களூரு வந்து கட்டுமான பணியில் ஈடுபட்டார். இதற்கிடையே தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அது தெரியாமல் சுபம் சாபர் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தார். சுபம் சாபரின் ரிசல்டை அவரது ஆசிரியர் பாசுதேவ் மோகரனா பார்த்தார். அப்போது சுபம் சாபர் பாஸாகி இருப்பது தெரியவந்தது. நீட் தேர்வில் பட்டியலினத்தவர்களுக்கான பிரிவில் அவர் 18,212 வது ரேங்கை பெற்றிருந்தார். இதையடுத்து அந்த ஆசிரியர் போன் மூலம் சுபம் சாபரை தொடர்பு கொண்டு நீட் தேர்வில் பாஸாகி இருப்பதை கூறினார். அதை கேட்ட சுபம் சாபர் ஆனந்த் கண்ணீர் சிந்தினார். மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
உடனடியாக தனது காண்ட்ராக்டரை தொடர்பு கொண்டு நீட் தேர்வில் தேர்ச்சியைடைந்தை கூறி உடனடியாக ஒடிசா செல்வதாக கூறினார். அதேபோல் தனது பெற்றோருக்கும் போன் செய்த சுபம் சாபர், ‛‛அம்மா.. நான் நீட் தேர்வில் பாஸாகிவிட்டேன். டாக்டராக போகிறேன்'' என்று கூறி மகிழ்ந்தார். சுபம் சாபர் 3 மாதம் வரை பெங்களூரில் பணி செய்திருந்தார். மொத்தம் ரூ.45 ஆயிரம் சம்பாதித்தார். இதில் ரூ.25 ஆயிரத்தை சேமித்து வைத்திருந்த பணத்தோடு ஒடிசாவுக்கு புறப்பட்டார்.
இப்போது சுபம் சாபருக்கு ஒடிசாவில் உள் எம்கேசிஜி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அட்மிஷன் கிடைத்துள்ளது. அந்த கல்லூரியில் அவர் சேர்ந்துள்ளார். இதுபற்றி சுபம் சாபர் கூறுகையில், ‛‛பெங்களூரில் நான் கட்டுமான பணிக்கு சேர்ந்தேன். பணி செய்து கொண்டிருந்தபோது எனது ஆசிரியர் போன் செய்து அனைவருக்கும் ஸ்வீட் கொடு என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் கேட்டேன். அப்போது தான் நீட் தேர்வில் பாஸானதை கூறினார். அதை கேட்டவுடன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. கனவு நனவாக போவதாக நினைத்தேன். மறுநாளே விடுப்பு கேட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். எங்களின் குடும்பம் அன்றாட செலவுக்கே கஷ்டப்படுகிறது. இதனால் தான் நீட் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்கு சென்றேன்'' என்றார்.
இதுபற்றி சுபம் சாபரின் பெற்றோர் கூறுகையில், ‛‛குழந்தை பருவத்தில் இருந்தே எங்களின் மகன் சுறுசுறுப்பாக இருப்பான். வீட்டு வேலையுடன் படிப்பிலும் நன்றாக செயல்பட்டான். டாக்டராக விரும்பி நீட் தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளான். கடின உழைப்பு எப்போதுமே இலக்கை அடைய உதவும். நாங்கள் ஏழை குடும்பம். இதனால் எனது மகனின் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் அவனால் 5 ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க முடியும்'' என கண்கலங்கினர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications