பெங்களூர் அருகே தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம்.. குலுங்கிய சோமசெட்டிஹள்ளியால் மக்கள் பீதி
பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகாக சோமசெட்டிஹள்ளி கிராமத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.9 என்று இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிக்கபள்ளாப்பூர் மாவடம் கவுரிபிதனூர் தாலுகா தரிதாலு கிராம பஞ்சாயத்துக்கு .ளட்பட்ட சோமசெட்டிஹள்ளி கிராமத்திலற்கு 2 கிலோமீட்டர் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 3.29 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. சிக்கபள்ளாப்பூர் நகரில் இருந்து வடமேற்கு திசையில் 33 கிலோமீட்டர்ல தொலைவில், அலிபுராவில் இருந்து 4.30 கிலோமீட்டர் தொலைவு வடமேற்கு திசையிலும் தரிதலுவில் இருந்து தென்மேற்கு திசைியல் 2.53 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் லேசானது தான். இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்'' என கூறப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி இந்த நிலநடுக்கம் ஏற்படும்போது பொதுமக்கள் தூக்கத்தில் இருந்ததால் பெரிய அளவில் மக்களால் உணரவும் முடியவில்லை. இ இருப்பினும் நேற்றைய தினம் பெங்களூர் புறநகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, இன்று சோமசெட்டிஹள்ளியில் நிலஅதிர்வு பதிவாகி உள்ளது. பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் பெங்களூர் புறநகர் மாவட்டம் திம்மோஜனஹள்ளி கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 என பதிவானது. திம்மோஜனஹள்ளி கிராமத்தில் அருகே உள்ள அருகே நரகனஹள்ளி, கர்னலா, துபெகெகெரே உள்ளிட்ட கிராமங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இருப்பினும் பெங்களூர் அருகே அடுத்தடுத்த நாட்களில் நிலநடுக்கம் ஏற்படுவது அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
