'லிஃப்ட்' கொடுப்பதுபோல் அழைத்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - தவெக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்​கோவி​லில் உள்ள கல்​லூரி​யில் படிக்கும் மாணவி ஒரு​வர், கன்னியாகுமரி மத்​திய மாவட்ட தவெக இளைஞர் அணி நிர்​வாகி​யான தனது தோழியுடன் நேற்று முன்​தினம் மாலை பேருந்​துக்​காக காத்​திருந்​தார்.

tvk sexual abuse nagercoil

அப்​போது, தக்கலை பகுதியைச் சேர்ந்த தவெக மத்​திய மாவட்ட தவெக செயற்​குழு உறுப்​பினர் கிறிஸ்டோபர் அந்த வழி​யாக காரில் வந்​துள்ளார். அவரது காரில் இருவருக்கும் லிஃப்ட் கொடுத்துள்ளார். முதலில் தனது ஊரான மூலச்சலில் தவெக பெண் நிர்​வாகியான மாணவி இறங்​கிக்​கொண்​டார்.

மற்றொரு கல்​லூரி மாணவியை அவரது ஊரில் கொண்டு விடுவ​தாக கூறி அழைத்​துச் சென்ற கிறிஸ்டோபர், பாதி வழி​யில் மழை பெய்ததால் கார் கண்ணாடியை துடைப்பது போல பாலியல் தொல்லை கொடுத்​துள்​ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரை கடுமையாக திட்​டி​விட்டு இறங்​கிச் சென்​றுள்​ளார்.

இது​குறித்து, தவெக நிர்​வாகி​யான தனது தோழி​யிடம் புகார் கூறி மாணவி அழுதுள்​ளார். இதையடுத்து அவர் கொற்​றிக்​கோடு காவல் நிலை​யத்​துக்கு மாணவியை அழைத்​துச் சென்று புகார் அளித்​துள்​ளார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசி பண பேரம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்த தகவல் சமூக வலை​தளங்​களில் பர​வி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி அன்​சுல் நாகர் உத்​தர​வின் பேரில், தக்​கலை மகளிர் போலீ​சார் விசா​ரணை நடத்தி, கிறிஸ்டோபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வரு​கின்​றனர்.

இந்த விவகாரம் குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பதிவில், "கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தனது கட்சி நிர்வாகி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதல்வர் விஜய்? சரித்திர பதிவேடு குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நிறைந்த கூடாரமாகத்தான் தவெக இருக்கிறது.

இதேபோல்'வேளாங்கண்ணியில் 2 சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு பெண்களுக்கு தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

"பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்" என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக சார்களால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் சார்களுக்கான முகவரியாக தவெக மாறி நிற்கிறது. இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே "சிங்கப்பெண் அதிரடிப் படை" எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode? மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். "நமக்கு நாமே பாதுகாப்பு" என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+