நீச்சல் குளத்தில் திடீரென பாய்ந்த மின்சாரம்.. ஆனந்த குளியல் போட்ட 2 வெளிநாட்டினர் பலி.. பெங்களூர் ஹோட்டலில் சோகம்
பெங்களூர்: பெங்களூர் தனியார் ஹோட்டலில் 3வது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட 2 வெளிநாட்டினர் பரிதாபமாக இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற அமெரிக்கர் உள்பட நம் நாட்டை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் என 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நீச்சல் குளத்தில் திடீரென்று மின்சாரம் பாய்ந்தது தான் காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூர் ஹலசூருவில் பிரபலமான கான்ராட் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் 3வது மாடியில் நீச்சல் குளம் உள்ளது. நேற்று மாலையில் நீச்சல் குளத்தில் ஸ்லோவாவாக்கியா என்ற நாட்டை சேர்ந் ஜூராஜ் ஹோர்வாட் (வயது 45), ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் மாக்சிமிலியன் (59) ஆகியோர் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று இருவரும் தண்ணீரில் துடிதுடித்து இறந்தனர். நீச்சல் குளத்தில் திடீரென்று பாய்ந்த மின்சாரத்தால் இவர்கள் 2 பேரும் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர்கள் 2 பேரையும் காப்பாற்ற அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும், நம் நாட்டை சேர்ந்த ஹோட்டல் ஊழியரும் முயன்றனர். அவர்கள் 2 பேரும் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
