‘லெஸ்பியன்’ உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு.. இளம்பெண்கள் எடுத்த விபரீத முடிவு.. உயிரே போச்சு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அருகே ஒரே மரத்தில், ஒரே சேலையில் 22 வயது மற்றும் 23 வயது நிரம்பிய 2 இளம்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பான விசாரணையில் இருவரும் 'லெஸ்பியன்' உறவில் இருந்ததாகவும், ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

பெங்களூர் எலகங்கா அருகே ஜக்கூர் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டைலையொட்டிய ஒரு மரத்தில், ஒரே சேலையில் 2 இளம்பெண்கள் தூக்கில் பிணமாக தொங்கினர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

nepal women

முதற்கட்ட விசாரணையில் இருவரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர்கள் ஸ்ரீஜனா (வயது 22) மற்றும் ரீட்டா (23) என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது பற்றி எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் 'லெஸ்பியன்' உறவில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:

''நேபாளத்தை சேர்ந்த ஸ்ரீஜனா, ரிதா ஆகியோர் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அங்குள்ள அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனை அவமானமாக குடும்பத்தினர் கருதினர்.

அதுமட்டுமின்றி ஸ்ரீஜனா, ரிதா ஆகியோரின் உறவினர்கள் பெங்களூரில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் சிறிது காலம் உறவினர் வீட்டிற்கு இருவரையும் அனுப்பி உள்ளனர். இதனால் கோபமான அவர்கள் நேபாளத்தில் இருந்து பெங்களூர் வந்துள்ளனர். பெங்களூர் பிரேசர் டவுனில் ரிதாவும், ஜக்கூரில் ஸ்ரீஜனாவும் தங்கி இருந்துள்ளனர். தனித்தனியே தங்கியிருந்தாலும் கூட அடிக்கடி இருவரும் சந்தித்து வந்துள்ளனர். வாரத்தில் குறைந்தபட்சம் 3 முறையாவது இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.

அதோடு இருவரையும் குடும்பத்தினர் பிரிக்க நினைக்கின்றனர் என்ற வருத்தம் அவர்களுக்குள் வந்துள்ளது. இதனால் அவர்கள் மனம் நொந்துபோயினர். மேலும் ஒன்றாக தான் வாழ முடியவில்லை. ஒன்றாக சாகலாம் என்ற முடிவுக்கு வந்து ஒரே மரத்தில் ஒரே சேலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+