கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்களும் அருகில் இருந்தே சுட்டு கொல்லப்பட்டது அம்பலம்! வெளியான திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிர வைக்கும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபல செய்தி சேனல்கள் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்களை வெளியிட்டுள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகியோரின் உடல்கள் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடலின் எந்தெந்த பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன, அவை எத்தனை அங்குல ஆழத்துக்கு சென்றுள்ளன என்பது உள்ளிட்ட விவரங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

3 Tamils were shot dead at close range by the Karnataka Forest Department - Shocking revelation

விலா எலும்பு உடைந்து இருக்கிறது

பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரையும் மிக அருகாமையில் வைத்தே சுடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தோணிசாமியின் வலது மார்பு, வயிற்றுப்பகுதி, கல்லீரல், கணையம் சிறுகுடல் பகுதிகளில குண்டு காயங்கள் உள்ளன. அந்தோணிசாமியின் விலா எலும்புகளும் முறிந்துள்ளன. குமார் உடலிலும் பல இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

இடது முன்பக்க மார்பில் தோட்டா பாய்ந்துள்ளது. அதேபோல விலா எலும்பு உடைந்து இருக்கிறது. நுரையீரல், இதயம் சேதம் அடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பி வந்த மகிமைதாசன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருந்தார். அதாவது, மாடுகளை தேடி சென்ற போது இரவு ஆகிவிட்டதால் வனப்பகுதியிலேயே படுத்து உறங்கியதாகவும் அங்கு வந்த வனத்துறையினர் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் தற்போது வெளியாகியுள்ள பிரதேச பரிசோதனை அறிக்கையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக எதிர்க்கட்சியான பாஜகவும் மாநில அரசு மீது இந்த விவகாரத்தில் பரபரப்பு குற்றச்சட்டுக்ளை தெரிவித்துள்ளது. சாம்ராஜ் நகர் என்கவுண்டரில் மூன்று தமிழர்களும் மிக அருகில் இருந்தே வனத்துறையால் சுடப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உண்மையை மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

மேலும், ஹானூர் என்கவுண்ட்டரில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை அரசு ஏன் வெளியிடவில்லை என்றும் கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் விஜேயந்திரா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜேயந்திரா கூறியதாவது:-

3 Tamils were shot dead at close range by the Karnataka Forest Department - Shocking revelation

ஹானூர் என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறிய பாஜக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சம்பவ இடத்திற்கு சென்று தகவல்களை திரட்டியுள்ளது. இதைத்தொடர்து இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் சில முக்கியமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக பிரதேச பரிசோதனைக்கு அரசு அனுப்பியது.

சிபிஐ விசாரணை வேண்டும்

ஆனாலும் ஏன் இன்னமும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை. பிரதேச பரிசோதனை அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும். அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?' என்றார். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+