10 கிமீ கடக்க 36 நிமிடம்.. பெங்களூரில் மோசமான போக்குவரத்து நெரிசல்.. இந்தியாவிலேயே முதலிடம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 36.09 நிமிடங்கள் ஆவதோடு, வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு 168 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலிலேயே செலவழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்.. எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகர் என்பது நமக்கு தெரியும். ஆண்டுதோறும் பெங்களூர் நகரில் உயரும் மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம்.

Bengaluru traffic

இதனால் பெங்களூர் நகரம் என்பது விரிந்து கொண்டே செல்கிறது. பெங்களூர் புறநகர் பகுதிகளில் மக்கள் தொடர்ந்து குடியேறி வருகின்றனர். இருப்பினும் மக்கள்தொகை அதிகரிப்பு, வாகன பெருக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப சாலை உள்கட்டமைப்புகள் வசதிகள் பெங்களூரில் இல்லை.

இதனால் எந்த சாலைகளை எடுத்து கொண்டாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் உலகின் பல்வேறு நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பற்றி ஆய்வு செய்து டேட்டாக்களை வெளியிட்டு வரும் 'டாம் டாம்' நிறுவனம் சார்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பையை விட போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூர் தான் முதலிடம் உள்ளது.

பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு இது ஒன்றும் ஆச்சரிமாக இருக்காது. ஏனென்றால் பெங்களூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை அவர்கள் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த ஆய்வில் சில முக்கிய தகவல்கள் உள்ளன. அதாவது கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கான குறியீடு 1.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

நெரிசல் மிகுந்த நேரங்களில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு வெறும் 13.9 கி.மீ. ஆக உள்ளது.
அதேபோல் பெங்களூரு நகரில் 10 கிலோ மீட்டா் தூரத்தை கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் 9 வினாடிகள் ஆகிறது. மேலும் பெங்களூருவில் உள்ள வாகன ஓட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பீக் ஹவர்ஸ்ஸில் (போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரங்கள்) மட்டும் சாலையில் 168 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதன்படி பார்த்தால் சுமார் 7 நாட்களை போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 2-வது இடத்தையும், புனே நகரம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+