ஏசி இயந்திரம் வெடித்து அறை முழுவதும் தீ.. விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
பெங்களூர்: கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மரியமானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் பிரசாத் (42). இவருக்கு சந்திரகலா (38) என்ற மனைவியும் ஆத்விக் (6), பிரேர்னா (8) என்ற குழந்தைகளும் இருந்தனர்.
இவர்கள் 4 பேரும் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதையடுத்து வீட்டிலிருந்த பொருட்கள் தீப்பிடித்தது எரிந்தது.

புகை சூழந்தது
அறைகளில் புகை சூழ்ந்து கொண்டது. மேலும் ஏசியிலிருந்து விஷவாயுவும் கசிந்தது. இதில் சிக்கிய வெங்கட் பிரசாந்த், சந்திரகலா, ஆத்விக், பிரேர்னா ஆகிய 4 பேரும் உயிரிழந்துவிட்டனர். போலீஸாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்தனர். 4 பேரின் சடலங்களை கைப்பற்றப்பட்டு விஜயநகர அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

விசாரணை
இந்த வழக்கு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெங்கட் குடும்பத்திற்கு ஏதேனும் கடன் தொல்லை இருந்து தற்கொலை செய்து கொண்டனரா இல்லை இது நிஜமாகவே விபத்துதானா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடகா மாநிலத்தில் ஏசி இயந்திரத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடைக் காலம்
கோடைக் காலம் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே ஏசி இயந்திரங்களில் விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டன. எனவே ஏசி விபத்துகளை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏசி மெக்கானிக்குகள் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்கள். அதில் முதலில் ஏசி வாங்கும் போது வீட்டில் பொருத்தும் இடத்தின் சதுரடியை கணக்கு எடுக்க வேண்டும்.

100 சதுரடி
100 சதுரடி கொண்ட அறைக்கு 1 டன் ஏசி போதும். அதற்கு மேல் இருந்தால் ஒன்றரை டன், 200 சதுரடி இருந்தால் 2 டன் ஏசி வாங்கலாம். ஏசி வாங்கும் போது ஸ்டெபிலைசர் நிச்சயமாக பொருத்த வேண்டும். நல்ல தரமானதை தேர்வு செய்து பொருத்த வேண்டும். ஏசியை படுக்கும் இடத்திலிருந்து 6 அடி உயரத்துக்கு பொருத்த வேண்டும்.

அறை முழுவதும்
அப்போதுதான் அந்த அறை முழுவதும் குளிர்ச்சி கிடைக்கும். ஏசியில் உயர் மின்னழுத்தத்தை தாங்கக் கூடிய அளவுக்கு கேபிள், சுவிட்ச் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஏசி பொருத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படவே கூடாது. சூரிய ஒளி அறைக்குள் இருந்தால் ஏசி குளிர்ச்சி அடைய லேட்டாகி கரன்ட்
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications