41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் கணவனிடம் சண்டையிட்டு பெற்றோர் வீட்டுக்கு நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக மதுபானம் குடிக்க வைத்து 10 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் சம்பவம் அதிர வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா பசவப்பட்டணா பகுதியை சேர்ந்த 41 வயது பெண். திருமணம் ஆனவர். கடந்த 3ம் தேதி அந்த பெண்ணுக்கும், அவரது கணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Davangere rape

இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தனது பெற்றோரின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அந்த பெண்ணின் அருகே சென்று அவரை கடத்தினர்.

அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கடத்தி சென்றனர். அங்கு 8 பேர் இருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து பெண்ணுக்கு மதுபானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றி பாலியல் தொல்லை கொடுத்தனர். ஏற்கனவே அவர்கள் மதுபானம் அருந்தி இருந்ததால் 10 பேரும் சேர்ந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனை அவர்கள் வீடியோவாகவும், போட்டோகவும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணிடம் சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. மீறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் யாரிடமும் சொல்லாமல்இருந்துள்ளார்.

இதற்கிடையே தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தபோது எடுத்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவ தொட்ஙகியது. வாட்ஸ்அப்களில் பலரும் பகிர்ந்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த பெண் சம்பவம் குறித்து பவசபட்டணா போலீசில் புகார் செய்தார். தாவணகெரே எஸ்பி சேகர் உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தி 10 பேரையும் கைது செய்தனர். செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் பதிவு செய்திருந்த வீடியோ, போட்டோக்கள் அழிக்கப்பட்டன. இதுபற்றி எஸ்பி சேகர் கூறுகையில், பெண் கூட்டு பலாத்கார வழக்கில் 10 பேரை கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. வீடியோ அழிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ பரவுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+