கால்பந்து போல்.. சிறுவர்களை சாலையில் எட்டி உதைக்கும் சைக்கோ கொடூரன்.. நடுக்கத்தில் பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் பாட்டியின் வீட்டு முன்பு 4 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் வந்த ஒருவர் கால்பந்தை எட்டி உதைப்பது போல் ஆக்ரோஷமாக எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியான நிலையில் பலரும் அந்த நபரை திட்டி தீர்த்து வுருகின்றனர்.

பெங்களூரில் வசித்து வருபவர் தீபிகா ஜெயின். திருமணம் ஆனவர். இவருக்கு 5 வயதில் மகன் உள்ளார். அவரது பெயர் நீவ் ஜெயின். இந்நிலையில் தான் நீவ் ஜெயின் பெங்களூர் தியாகராஜநகரில் உள்ள பாட்டி வீட்டின் முன்பு ரோட்டில் விளையாடி கொண்டிருந்தான்.

5-year-old-boy-who-was-playing-near-his-grandmothers-house-in-bengaluru

நீவ் ஜெயினுடன் அந்த பகுதியில் வசித்து வரும் பிற சிறுவர், சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அதே பகுதியில் ரஞ்சன் என்பவரும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த ரஞ்சன், திடீரென்று விளையாடி கொண்டிருந்த நீவ் ஜெயினை எட்டி உதைத்தார். கால்பந்தை எட்டி உதைப்பது போல் சிறுவனுக்கு பின்னால் நடந்து வந்து சட்டென எட்டி உடைத்தார். இதில் அந்த சிறுவன் சாலையில் விழுந்தான். இதையடுத்துஅங்கிருந்தவர் சிறுவனை மீட்டார். கீழே விழுந்ததில் சிறுவன் நீவ் ஜெயின் காயமடைந்து கதறி அழுதான்.

நீவ் ஜெயினின் இமையில் இருந்து ரத்தம் கொட்டியது, கை மற்றும் காலில் ரத்த காயம்ஏற்பட்டது. இருப்பினும் ரஞ்சன் எதையும் கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றார். இதுதொடர்பாக நீவ் ஜெயினின் தாய் தீபிகா ஜெயின் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு ரஞ்சனை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே தான் சாலையில் விளையாடிய சிறுவன் நீவ் ஜெயினை, ரஞ்சன் எட்டி உதைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் ரஞ்சனை கடுமையாக திட்டி வருகின்றனர்.

மேலும் இந்த ரஞ்சன் இப்படி சிறுவர், சிறுமியர்களை தாக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை சாலையில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை தாக்கி உள்ளார். சைக்கிளில் செல்லும் சிறுவர்களின் தலையை பிடித்து அசைப்பது, சாலையில் நடந்து செல்லும் சிறுமியர் மீது மோட்டார் சைக்கிளில் சென்று மோதுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+