Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சே நடுங்குது.. 71 வயது தாத்தாவை.. 500 மீட்டருக்கு பைக்கில் தரதரவென இழுத்து.. பதறவைக்கும் வீடியோ

முதியவரை பைக்கில் இழுத்து சென்ற இளைஞரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் கார் மீது மோதிவிட்டு பைக்கை நிறுத்தாமல் சென்ற இளைஞரை பிடிக்க முயன்ற 71 வயது முதியவரை, சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லியில் புத்தாண்டு தினத்தில், அஞ்சலி சிங் என்ற இளம்பெண் விபத்து ஏற்பட்டு மரணமடைந்த அதிர்ச்சி இன்னமும் யாருக்கும் நீங்கவில்லை.. காருக்கு அடியே சிக்கிய நிலையில், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு, உயிரிழந்தார்..

உடலும் நிர்வாணமாக கிடந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகமெல்லாம் கிளம்பியது. இதற்கு பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது.

 விலா எலும்புகள்

விலா எலும்புகள்

அவரது உடலில் 40 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவரது விலா எலும்பு முதுகில் இருந்து வெளியவே வந்துவிட்டது என்றும், முதுகுதுத்தண்டு, கீழ்மூட்டு, மற்றும் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் அளவுக்கு அதிகமான காயங்கள் இருந்ததாகவும் போஸ்ட் ரிப்போர்ட் வந்தது.. அஞ்சலி சிங்கின் உடல் நிர்வாணமாக இருந்தாக சொல்லப்பட்டதால், பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேமுகம் வலுத்த நிலையில், அதன்பேரில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. அதில், அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது..

 மரண அதிர்ச்சி

மரண அதிர்ச்சி

அதாவது, காருக்கு அடியில் அஞ்சலி சிங் சிக்கிவிட்டது, குற்றவாளிகளுக்கு முன்பே தெரிந்துவிட்டதாம்.. ஆனால், இறங்கி காப்பாற்றினால் எங்கே கொலை வழக்கில் சிக்கிக்கொள்வோமோ என்ற பயத்தினாலேயே அவர்கள் காரை நிறுத்தாமல், ஓட்டியதாக வாக்குமூலத்தில் சொன்னார்களாம்.. இப்படி காரோடு இழுத்து கொண்டு போனதில்தான் அதிக அளவு உடல் உறுப்புகள் சேதமடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அப்பெண்ணின் மரணத்தின் அதிர்ச்சி அடங்கவேயில்லை. இன்னொரு சம்பவம் இப்படி கர்நாடகாவில் தற்போது நடந்துள்ளது.

 ரயில்வே ஸ்டேஷன்

ரயில்வே ஸ்டேஷன்

பெங்களூரு நகரில் ஹொசஹள்ளி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே, 25 வயது இளைஞர் ஒருவர் பைக்கில் சென்றுள்ளார்.. மிக வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு, பொலீரோ கார் மீது மோதியுள்ளதாக தெரிகிறது.. அப்போது பைக் மற்றும் பொலீரோ கார் இரண்டுமே கடுமையான சேதம் அடைந்திருக்கிறது.. எனவே, பொலீரோ கார் டிரைவரான முத்தப்பா என்பவர், காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு தொகை வழங்குமாறு கேட்டுள்ளார்... ஆனால் பணம் கொடுக்க இளைஞர் மறுத்ததுடன், பைக்கில் அங்கிருந்து கிளம்ப முயற்சித்துள்ளார்..

 தரதரவென இழுத்து

தரதரவென இழுத்து

இதனால் கோபமடைந்த முத்தப்பா, பைக்கை தடுத்து நிறுத்த முயன்றுதடன், 0முத்தப்பா பைக்கின் பின்னால் உள்ள கைப்பிடியை பிடித்தவாறு சாலையில் படுத்தபடியே துரத்திச்சென்றார். இதை பார்த்ததும், அந்த இளைஞர் வேகமாக பைக்கை ஓட்டி, முத்தப்பாவை சாலையில் தரதரவென இழுத்து சென்றார்.. பின்னால் வாகனத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். பைக்கை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துவிட்டார் முத்தப்பா.. அப்போது அந்த இளைஞர், சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு முத்தப்பாவை தரதரவென இழுத்து சென்றுள்ளார்..

படுகாயம்

படுகாயம்

சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அதில் ஒரு ஆட்டோ டிரைவர், ஆட்டோவில் வேகமாக சென்று தடுத்து நிறுத்தினார்... அதற்குள் பொதுமக்கள் ஒன்று சேர்ந்துவிட்டனர்.. அந்த இளைஞரை போலீசாரிடமும் ஒப்படைத்தனர்... கோவிந்த் ராஜ் நகர் போலீசார் இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. சாலையில் தரதரவென இழுத்து சென்றதில் படுகாயம் அடைந்த முத்தப்பா இப்போது விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்துவருகிறது.

 மன்னிப்பு

மன்னிப்பு

முத்தப்பாவுக்கு 71 வயதாகிறது.. பைக்கிலேயே சுமார் 1 கிமீ தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அதிர்ச்சியில் உள்ளார்.. சிகிச்சை பெற்றுவரும் முத்தப்பா இதை பற்றி சொல்லும்போது, இளைஞர் மிகவும் வேகமாக ஓட்டியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. அவர் தவறு செய்திருந்தபோதும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.. என்னை திட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.. அவரை போலீஸில் பிடித்து கொடுக்கவே பைக்கை இழுத்து பிடித்தேன். நான் பைக்கை விட்டுவிட வேண்டும் என்பதற்காக மிகவும் வேகமாக ஓட்டினார்.. ஆனாலும் நான் விடவில்லை. இறுதியில் சில வாகன ஓட்டிகள் அவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+