300 பெண்களுக்கு "செக்ஸ் டார்ச்சர்".. மகனுடன் சேர்ந்து அப்பாவும் ஆட்டம்! எச்டி ரேவண்ணா மீதும் வழக்கு
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ வழக்கில் அவரின் அப்பா ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.,
பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவண்ணா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச் டி ரேவண்ணா ஆகியோர் மீது 47 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஹோலநரசிபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகன் மற்றும் தந்தை இருவரும் அந்த பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மேலும் பல புகார்களை போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
வழக்கு பின்னணி; கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் பரவும் சில வீடியோக்கள் மற்றும் பென் டிரைவ்கள் மக்களிடையே கவனம் பெற்றுள்ளன. அந்த வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
அந்த வீடியோக்களில் ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா உள்ளார். அதன்படி அவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பதிவாகி இருக்கின்றன.
பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளனர். இதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
1000 வீடியோக்கள்: இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் இவரை கைது செய்ய முடியவில்லை. அம்மாநில உள்ளூர் செய்தி சேனல்களின்படி 2700க்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்புகள் மக்கள் இடையே பரவி உள்ளன. 300 பேர் ரேவண்ணா மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவிற்கு சிக்கல்: பல ஆயிரம் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பிரஜ்வல் ரேவண்ணா மூலம் பல ஆயிரம் பெண்கள் கடுமையாக துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. முக்கியமாக இவர்கள் கடுமையாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி கொடூரத்தில் அதிமுகவினர் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளானது போல அங்கே தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் சிக்கி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இது பாஜகவிற்கு எதிராகவும் திரும்பி உள்ளது.
பாஜகவினர் அதிர்ச்சி; பிரஜ்வல் ரேவண்ணாவே பதிவு செய்ததாகக் கூறப்படும் பல பெண்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் அந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்னதாகவே சுற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் தற்போது பாஜகவிற்கு பெரிய அளவில் எதிராக திரும்பி உள்ளது. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இந்த வீடியோ மாறி உள்ளது. அதிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் உள்ளன என்பதால் பாஜகவை பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications