காவி நிறத்தில் குடுமி- பூணூலோடு பிராமின் குக்கீஸ்.. பிஸ்கெட்டிலும் ஜாதியமா? நெட்டிசன்கள் கொந்தளிப்பு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒரு பேக்கரியில் பிராமின்ஸ் குக்கீஸ் என்ற பெயரில் பிரத்யேக குக்கீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஃப்ரெடி பேக்கிங் ஸ்டூடியோ எனும் நிறுவனம் குழந்தைகளுக்கான குக்கீஸ் பிஸ்கெட்டுகளை பிரத்யேகமாக தயாரித்து வருகிறது. இது பிரபலமான நிறுவனமும் கூட! இந்த நிறுவனத்தின் பிஸ்கெட்டுகள் தற்போது ட்விட்டரில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
இந்த நிறுவனம் தற்போது பிராமீன்ஸ் குக்கீஸ் எனும் பிரத்யேக பிஸ்கெட்டுகளை தயாரித்துள்ளது. அந்த பிஸ்கெட்டுகளில் மொட்டையடிக்கப்பட்ட தலை, பூணூல், குடுமி, காவி உடை என பிராமணர்களுக்கான அடையாளங்கள் உள்ளன.

பிஸ்கெட்டுகள்
இந்த பிஸ்கெட்டுகளை தனி நபர் ஒருவர் தனது வீட்டில் நடந்த பூணூல் அணியும் விழாவுக்காக தயார் செய்ய ஆர்டர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. உண்ணும் உணவில் கூடவா ஜாதியத்தை புகுத்துவீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த பிஸ்கெட்டை ஃப்ரெடி பேக்கிங் கம்பெனி சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

பாரம்பரியம்
அதில் ஒருவருடைய பாரம்பரியங்களை பிஸ்கெட்டாக மாற்றுவது என்பது அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகும். இணையவாசிகள் தங்களின் வினோதமான குக்கீ திட்டங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுக் கொண்டது. ஆனால் யாருமே இதை வினோதமாக பார்க்கவில்லை என்றும் வன்மமாகவே பார்க்கிறார்கள் என்பதும் அவர்களது கமென்டுகளில் இருந்தே தெரிகிறது.

ஜாதி அமைப்பு
ஜாதி அமைப்பை பாதுகாக்கும் நோக்கி ஆதிக்க ஜாதியினர் புதுவையான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் இந்த குக்கீஸும் ஒன்று என ட்விட்டரில் கருத்துகளை பரிமாறி கொள்கிறார்கள். அந்த குக்கீயில் இருக்கும் உருவம் தெனாலிராமன் போல் இருப்பதாகவும் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகு அந்த குக்கீகளின் புகைப்படத்தை அந்த நிறுவனம் நீக்கிவிட்டது.

பிராமின் குக்கீஸ்
பெங்களூரில் பிராமின் குக்கீஸ் மட்டுமல்ல, பிராமின் என்ற அடைமொழியுடன் ஹோட்டல்கல் இயங்கி வருவதும் ஒரு வித ஜாதியம் என்கிறார்கள். பெங்களூரில் பிராமண உணவகம் (brahmin Eateries) பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின்ஸ் எக்ஸ்பிரஸ், அம்மா பிராமின்ஸ் கபே என்ற பெயர்களில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பிராமின் உணவகம்
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெயர்களை ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்வோரும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஜாதிய பெயர்களை எதற்காக உணவகங்களின் பெயர்களுக்கு வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிராமண உணவு என்ற ஒன்று இல்லவே இல்லை. அப்படியிருக்கும் போது இந்த பெயரை வைப்பதால் பிராமண உணவு என தனித்துவப்படுத்துவது வெறும் சாதியைச் சார்ந்தே உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications