Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் மாலில் புத்தாண்டுக்கு 'போட்டோஷூட்'.. தடை போட்ட பெற்றோர்.. கல்லூரி மாணவி விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : பெங்களூர் நகரில் புத்தாண்டு அன்று மாலுக்கு போய் 'போட்டோஷூட்' எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவி, அதற்காக பெற்றோரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டதால் சோகமான மாணவி, விபரீத முடிவெடுத்து உயிரையே விட்டுள்ளார்.

இன்றைய 2கே கிட்ஸ்கள் வாழ்வில் சிறு ஏமாற்றங்களை கூட தாங்கி கொள்ள தயாராக இல்லை.. தங்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை கூட தீர்க்க வழி தெரியாமல், வாழ்க்கையே துயரமானது போல் மனஅழுத்ததிற்கு ஆளாகிறார்கள். சிறுவயதில் இருந்தே பண கஷ்டமோ, மன கஷ்டேமோ இல்லாமல் பிள்ளைகளை பார்த்து பார்த்து பெற்றோர் வளர்ப்பதே இந்த சிக்கலுக்கு காரணமாகிறது.

A College girl dies After Parents ban New Years photoshoot in Bangalore mall

ஒரு பிரச்சனை வந்தால் அதனை எப்படி தீர்க்க வேண்டும் என்று சொல்லித்தராமல், பிரச்சனையே வராமல் பார்க்கிறார்கள். பிரச்சனைகள் வந்தாலும் பெற்றோரே அதனை தீர்க்கிறார்கள். மேலும் ஏமாற்றங்கள், சண்டைகள் இவற்றை காட்டாமல் வளர்ப்பதால், உளவியல் ரீதியாக பின்னாளில் பெரிய சிக்கலில் சிக்குகிறார்கள். அப்படித்தான் பெங்களூர் நகரில் ஒரு பெண் சந்தித்து உயிரையே விட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு வில்சன்கார்டன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுதாமநகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயதாகும் வர்ஷினி . இவர் பெங்களூர் ஜெயநகரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லூரி மாணவி வர்ஷினிக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. அதற்காக அவர் தனியாக புகைப்பட கலையையும் பயின்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டை வரவேற்க பெங்களூர் நகரின் பல்வேறு மால்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஏராளமான மக்கள் கொண்டாடுவதற்காக திரண்டிருந்தார்கள். இதனால், வர்ஷினியும் புத்தாண்டையொட்டி மால்களில் சென்று 'போட்டோஷூட்' எடுக்க திட்டமிட்டார். ஆனால் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 'போட்டோஷூட்' எடுக்க வர்ஷினி மாலுக்கு போகக்கூடாது என அவரது பெற்றோர் தடை போட்டனர். மேலும் அவரை மாலுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

இதனால் மனம் உடைந்த வர்ஷினி வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவி வர்ஷினி, திடீரென்று தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.இதனிடையே அறையில் இருந்து அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் மின்விசிறியில் வர்ஷினி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரது பெற்றோர் கதறி அழுதார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வில்சன்கார்டன் போலீசார் நடத்திய விசாரணையில், புத்தாண்டையொட்டி 'போட்டோஷூட்' எடுக்க மாலுக்கு பெற்றோர் அனுப்ப மறுத்ததால் வர்ஷினி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+