நிர்வாணமாக கிடந்த 55 வயது பெண் உடல்.. சிறுவனை தேடும் போலீஸ்! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கட்டிட வேலை செய்து வந்த 55 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் சிறுவன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு அமிர்தல்லியில் உள்ள காபி போர்டு பகுதியில் கட்டுமான பணிகள் பல நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறர். கட்டுமானம் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு அருகில் சக கட்டுமான தொழிலாளர்களோடு இப்பெண் குடிசை அமைத்து தங்கியிருந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னர் இரவு 8 மணியளவில் இவர் குடிசையை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது மர்ம நபர் ஒருவர் இப்பெண்மணியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றிருக்கிறார்.

பெண்ணை கட்டுமானம் நடைபெறும் பகுதிக்குள் வைத்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் கொலை செய்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் சக தொழிலாளர்கள் இப்பெண்ணின் நிர்வாண உடலை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து காவல்துறை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவன் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது கடந்த பிப்ரவரி மாதம், சம்பங்கிராம நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டிடம் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது கடந்த பிப்.18ம் தேதி ஆட்டோ ஒன்றில் இளம்பெண் ஏறியிருக்கிறார். இளம்பெண் சொன்ன இடத்திற்கு கொஞ்ச தூரம் முன்னர் ஆட்டோ சிக்னிலில் நின்றிருக்கிறது. அப்போது திடீரென அப்பெண் இறங்கி ஆட்டோவுக்கு பணம் கொடுக்காமல் ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பெண்ணை மீது ஆட்டோ தேடி வந்திருக்கிறார். எதிர்பார்த்ததை போலவே இளம்பெண் அடுத்த நாள் சிக்கவே, அவரை கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் ஆட்டோ டிரைவர்.
ஆட்டோ டிரைவரை மார்ச் 1ம் தேதி காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் அனைத்து உண்மையையும் அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தற்போது மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், பெண்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
அதேபோல லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இந்த பிரச்னைகளை வளரவிடாமல் தடுக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications