எடியூரப்பா மோசம்.. அவரை ஆளுநராக போடுங்கள்.. கர்நாடக பாஜகவில் சுற்றும் மர்ம கடிதம்.. என்ன நடக்கிறது?
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வேறு மாநிலத்திற்கு ஆளுநராக்க வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் இடையே மர்ம கடிதம் ஒன்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வேறு மாநிலத்திற்கு ஆளுநராக்க வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் இடையே மர்ம கடிதம் ஒன்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
கர்நாடக அரசியலில் தற்போது பாஜக எம்எல்ஏக்களால் புதிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் நேற்று இரவு நடத்திய ரகசிய மீட்டிங் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து நேற்று எடியூரப்பாவிற்கு எதிராக ஆலோசனை செய்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் செய்யப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்தே இப்படி ஆலோசனை நடந்தது என்று கூறுகிறார்கள்.

கடிதம்
இந்த நிலையில் இந்த ஆலோசனைக்கு பிறகு கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு எதிராக மர்ம கடிதம் ஒன்று சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. அதில்,எடியூரப்பா கட்சியில் யாரையும் வளர விடவில்லை. அவர் மிகவும் சுயநலமாக இருக்கிறார். தான் மட்டும்தான் கட்சியில் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

என்ன உழைப்பு
அவர் கட்சிக்காக உழைப்பது உண்மைதான். தனி நபராக கட்சியை அவர் வளர்த்தார். அவரை பாராட்டுகிறோம். ஆனால் தான் மட்டுமே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அவர் இப்போது நினைக்கிறார். அதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு எதிராக பாஜகவின் தேசிய தலைமை விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

ஜாதி எப்படி
அவர் தனது சொந்த ஜாதியை சேர்ந்த தலைவர்களை கூட முன்னேற விடுவதில்லை. தனக்கு நிகராக கட்சியில் யாரும் வர கூடாது என்று நினைக்கிறார். அதேபோல் தனது மகன் விஜேந்திராவிற்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது அவர் இப்படி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று, இந்த மர்ம கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video

பாஜக எம்எல்ஏக்கள்
சரியாக பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் நடத்திய ரகசிய மீட்டிங்கிற்கு பிறகு இப்படி ஒரு கடிதம் உலவிக்கொண்டு இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. எடியூரப்பா தரப்பை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேபோல் எடியூரப்பா ஆதரவாளர்களை இது கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. நேற்று நடந்த இந்த 16 எம்எல்ஏக்களின் ரகசிய மீட்டிங்கில் கர்நாடக பாஜகவின் மூத்த தலைகள் சிலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications