பெங்களூரு லூலூ மாலில் வயதானவர் செய்யுறத பாருங்க..எந்த மாதிரியான ஒரு கேவலமான உளவியல்.. தேடும் போலீஸ்
பெங்களூரு: பெங்களூரு லூலூ மாலில் பல பேர் முன்னிலையில் வயதான ஒருவர் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக ஊடங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதை பார்த்த பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகிறார்கள்.
பொதுவாக பெண்களை இளைஞர்களிடம் இருந்து பாதுகாப்பதை விட வயதான மற்றும் நடுத்தர வயது ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். சில வயதானவர்கள், சில நடுத்தர வயது உடையவர்கள் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுடன், வார்த்தைகளால் சொல்ல முடியாத கேவலமான உளவியல் சிந்தனையுடன் நடமாடுகிறார்கள். அவர்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதுடன், பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக சிறுமிகள், குழந்தைகளை இந்த மாதிரியான ஆட்களிடம் பேசக்கூட விடக்கூடாது என்று சொல்ல தோன்றும். ஏனெனில் குழந்தைகளை கூட இவர்கள் விட்டுவைப்பது இல்லை. குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இவர்கள் தான்.. இவர்களை எல்லாம் வெளியில் விடுவதே ஆபத்தானது என்று சொல்லும் அளவுக்கு அடிக்கடி சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பெங்களூருவில் பிரபலமான லூலூ மாலில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெங்களூருவில் லூலூ மாலில் உள்ள கேம் சென்டரில், இளம் பெண் ஒருவர் நீல நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார். பின்னாடியே கண்ணாடி அணிந்தபடி வந்த வயதானவர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் பின்னால் சென்று உரசி, சில வினாடிகள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து செல்கிறார்.

13 வினாடிகள் உள்ள இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. என்ன ஒரு கேவலமான உளவியல் என்று பலரும் திட்டி வருகிறார்கள். அந்த பெண் சிறுமியா அல்லது பெரிய பெண்ணா என்பது சரியாக தெரியவில்லை.. அந்த பெண்ணின் முகம் தெளிவாக தெரியவில்லை.. இந்த சம்பவம் குறித்து பலரும் பெங்களூரு மாநகர போலீஸை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேள்வி எழுப்பினர். இதையடுத்து பெங்களூரு போலீசார் எந்த இடம், நடந்தது எப்போது என்று கேள்வி எழுப்பியதுடன், உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பெங்களூர்ல ஒருத்தர் இதை நோட் பண்ணி ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க .. beng police டைம் லொகேஷன் கேட்டு ரிப்ளை போட்டிருக்காங்க .. சீக்கிரம் புடிச்சிருவாங்க ...
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) October 30, 2023
ஆனா இது எந்த மாதிரியான ஒரு கேவலமான உளவியல் .. இந்த மாதிரி ஆட்களை வெளிய விட்றதே தப்பு pic.twitter.com/7IqO8FVL2X












Click it and Unblock the Notifications