Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரைகுறை ஆடையில் போதையில் தள்ளாடிய இளம்பெண்கள்! பெங்களூர் புத்தாண்டு கொண்டாட்ட வீடியோ - சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 2026ம் ஆண்டு புதிதாக பிறந்துள்ளது. நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றனர். இந்த வேளையில் பெங்களூரில் அரங்கேறிய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அரை குறையான மேற்கத்திய கலாசார உடையுடன் பெண்கள் மதுபானம் குடித்து போதையில் தள்ளாடி தள்ளாடி நடந்து சென்றதும், அவர்களின் ஆடை விலகிய நிலையில் அதனை மற்றவர்கள் சரிசெய்து விடுவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இன்னும் சிலரோ.. பெங்களூரின் இந்த நிலைக்கு வெளிமாநிலத்தவர்கள் தான் காரணம் என்று பழிபோடுவது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

2026ம் ஆண்டு புதிதாக பிறந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்ம நாடு முழுவதும் களை கட்டியது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்றனர். பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் 2026ம் ஆண்டை வரவேற்றுள்ளனர். மேலும் சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனையும், கோவில்களில் சிறப்பு பூஜையும் நடந்தன.

a-video-of-women-staggering-while-walking-in-a-drunken-state-during-new-years-celebrations-in-benga

இது ஒருபுறம் இருக்க இளசுகள் வழக்கம்போல் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி தீர்த்தனர். சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி என நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் புத்தாண்டு நாளில் பப்புகள் நிரம்பி வழிந்தன. டிஜே மியூசிக்குடன் இளம் வயதினர் புத்தாண்டை ஜோடியாக வரவேற்றனர்.

பலரும் மதுபானம் குடித்து போதையில் இருந்தனர். குறிப்பாக பெங்களூர் நகரை எடுத்து கொண்டால் வழக்கம்போல் சர்ச் தெரு, எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா, இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கானவர்கள் பெங்களூரில் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

பெங்களூரில் இளம்பெண்கள், இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்து போதையில் தள்ளாடி தள்ளாடி நடந்து செல்கின்றனர். மேலும் சில இளம்பெண்களை பெண் காவலர்களும், அவர்களின் நண்பர்களும் கைத்தாங்கலாக அழைத்து செல்வது பதிவாகி உள்ளது. அப்போது அவர்கள் மேற்கத்திய கலாசார உடை அணிந்திருந்த இளம்பெண்கள் போதையில் இருக்க அவர்களின் உடைகள் கலைந்திருப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இன்னொரு வீடியோவில் உடன் வந்த இளம்பெண்ணின் உடை போதையில் கலைந்து இருக்க.. அவருடன் வந்தவர் அதனை சரிசெய்து அழைத்து செல்வதும் பதிவாகி உள்ளது. இப்படியாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது உலா வருகின்றன. இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. சிலர் தனிநபர் சுதந்திரத்தை ஆதரித்தாலும், பலரும் பொதுவெளியில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் இப்படியான போதை வேண்டுமா? என கேள்வியெழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக Karnataka Portfolio என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛2026 ஜனவரி 1ல் நடந்து இருப்பது இது பெங்களூருவின் கலாசாரம் அல்ல. புத்தாண்டு மற்றும் கொண்டாட்டம் என்ற பெயரில் பெங்களூரின் மதிப்பை கெடுக்க வேண்டாம். இளைஞர்கள் போதையில் சாலைகளில் விழுவதும், சண்டையிடுவதும், மற்றவர்களுக்கு திட்டுவதும் வெட்கக்கேடானது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பெங்களூர் எப்போது அதன் கலாசாரம், நாகரிகத்துக்காக அறியப்படுகிறது. பெங்களூர் எப்போது வெவ்வேறு கலாசாரம், பாரம்பரியம் கொண்ட வெளிமாநிலத்தவர்களை ஏற்றுக்கொள்கிறது. இதுதான் பெங்களூரை சிறந்த நகரமாக மாறி உள்ளது. இருப்பினும் கொண்டாட்டம் என்ற பெயரில் சில தனிநபர்களின் இத்தகயை செயல் பெங்களூர் நகருக்கு கெட்டப்பெயரை ஏற்படத்துகிறது. இது உலகம் முழுவதும் பெங்களூர் பற்றிய தவறான பார்வைக்கு வழிவகுக்கும்.

கொண்டாட்டத்தில் சுயக்கட்டுப்பாட்டை இழப்பது சரியானது இல்லை. நீங்கள் உள்ளூரை சேர்ந்தவராக இருந்தாலும் சரி வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து வசித்தாலும் சரி கொண்டாட்டங்களை பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பெங்களூர் போலீசாருக்கு மனமாறர்ந்த நன்றி. பெங்களூர் போலீசார் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

இன்னும் சிலரோ, இத்தகைய போதை கொண்டாட்டங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள ஈடுபடவில்லை. வெளிமாநிலத்தை சேர்ந்தவர் தான் ஈடுபடுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இதற்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு தரப்பினரோ, ‛‛ இந்த புத்தாண்டு என்பது மேற்கத்திய காலாசார பண்டிகை. இதனை ஏன் நாம் கொண்டாட வேண்டும்? இதுபோன்ற கொண்டாட்டங்களை தொடர்ந்தால் இன்னும் சில காலத்தில் நாம் நம்முடைய கலாசாரத்தையே மறந்துவிடுவோம்'' என்று கூறி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பெங்களூர் புத்தாண்டு கொண்டாட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+