சித்தராமையா, டிகே சிவகுமார், கார்கே, குமாரசாமி, பொம்மை.. மக்களின் முதல்வர் சாய்ஸ் யார்? பரபர சர்வே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்வியுடன் ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸின் சித்தராமையாவுக்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை பின்தங்கி உள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார், ஜேடிஎஸ் முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட பல தலைவர்களுக்கும் மக்கள் கணிசமாக ஆதரவு அளித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பின் விபரம் வருமாறு:

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த 2018ல் தேர்தல் நடந்த நிலையில் 5 ஆண்டு நிறைவு பெற உள்ளது. இதனால் மீண்டும் கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு

ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு

கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. இதுதவிர வேறுசில கட்சிகளும் தேர்தலில் களமிறங்க உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. நேற்று ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவு வெளியானது.

காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி

காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி

இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்று வெளியான ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 115 முதல் 127 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக 68 முதல் 80 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 23 முதல் 35 தொகுதிகளிலும் வாகை சூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முதல்வராக சித்தராமையாவுக்கு ஆதரவு

முதல்வராக சித்தராமையாவுக்கு ஆதரவு

மேலும் இந்த கருத்து கணிப்பில் அடுத்த முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்வியுடன் முன்வைக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் முதல்வராக வேண்டும் என்று 39.1 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 21.4 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் என 3.2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கார்கேவுக்கு ஆதரவு எவ்வளவு?

கார்கேவுக்கு ஆதரவு எவ்வளவு?

இவர்கள் தவிர பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டிலுக்கு ஆதரவாக 1.6 சதவீதம் பேரும், ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவர் முதல்ரவாக வேண்டும் என 1.4 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே முதல்வராக வேண்டும் என 0.7 சதவீதம் பேரும், பாஜகவின் முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ெஷட்டருக்கு ஆதரவாக 0.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+