பழைய மைசூரு பகுதியை தட்டித்தூக்கும் காங்கிரஸ்.. பாஜகவுக்கு பூஜ்யம்? சொல்வது ஏபிபி சி-வோட்டர் சர்வே!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய மைசூரு பகுதியில் பாஜக பெரும் அடி வாங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணியாற்றின. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்பது கூறப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பகுதியில் மொத்தமுள்ள 32 சீட்களில் பாஜக 15-19 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 11-15 இடங்களையும் கைப்பற்றும், ஜேடிஎஸ் 1-4 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பழைய மைசூரு மண்டலத்தில் மொத்தமுள்ள 55 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28-32 இடங்களையும் ஜேடிஎஸ் 19-23 இடங்களையும் கைப்பற்றும், பாஜக 0-4 இடங்களை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மத்திய கர்நாடகாவில் மொத்தமுள்ள 35 சீட்களில் 12-16 இடங்களை பாஜகவும், 28-22 இடங்களை காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் 0-2 இடங்களையும் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications