மீடூ புகார்.. அர்ஜூன் செம சூடாக இறங்கி விட்டார்.. ஆனால் தமிழ்நாடு மகா அமைதியா இருக்கே!
தன் மீதான புகார்களை ரத்து செய்ய நடிகர் அர்ஜூன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: தன் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் சம்பந்தப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் அர்ஜூன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இதுவரை அளிக்கப்பட்டுள்ள மீ டூ விவகாரங்களில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சம்பந்தப்பட்ட புகார் மீது தான் அடுத்தடுத்து நடவடிக்கை உடனடியாக நடந்து வருகிறது. நிபுணன் படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிகரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்தார். இது கர்நாடகம், தமிழகம் என இரு மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுகுறித்து அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார்.

மான நஷ்ட வழக்கு
இருந்தாலும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இரு தரப்பையும் அழைத்து பேசுகிறோம் என சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கூட்டத்தில் பேசிய அர்ஜூன், "நான் சமசரம் செய்து கொள்ள மாட்டேன், என் மீது அவர் எப்படி பாலியல் புகார் அளிக்கலாம்? ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்" என்று சொல்லிவிட்டு, அது சம்பந்தமான நீதிமன்ற பணிகளிலும் அதிரடியாக இறங்கினார்.

4 பிரிவுகளில் வழக்கு
இது ஒரு பக்கம் என்றால், ஸ்ருதி ஹரிஹரன் நேராக பெங்களூரு போலீசில் போய் நடிகர் அர்ஜூன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல், பெண்களை அவதூறு செய்வது, மிரட்டல், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் நடப்பது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐகோர்ட்டில் மனு
இந்த வழக்கு சம்பந்தமாக அர்ஜூன் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இதையடுத்து தன் மீதுதொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, அர்ஜூனின் வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் நேற்று கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

நாளை விசாரணை
அதில், அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கை நேற்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி தினேஷ்குமார், விசாரணையை நாளை (2-ம் தேதி) நடத்துகிறேன் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த விசாரணை நாளை நடைபெற உள்ளது. ஒரு பக்கம் ஸ்ருதியும், மற்றொரு பக்கம் அர்ஜூனும் மாறி மாறி புகார்களை சொல்லி வருகின்றனர். காவல்துறையும், நீதித்துறையும் இந்த விவகாரங்களை சூடாக விசாரித்தும் வருவதால் கன்னட சினிமாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டே இருக்கிறது.

ஆதாரம் தேடுகிறார்
ஆனால் நம் மாநிலத்தில் மீ டூ புகார் தொடர்பாக ஒரு முன்னேற்றத்தையும் காணோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒருவர் தொடர்ந்துள்ளார், இன்னொருவர் வழக்கை தொடர போகிறேன் என்று மட்டும் சொல்லி இருக்கிறார். ஆனால் புகார் அளித்த முக்கியமும் மூலமுமானவர் இன்னமும் ஆதாரத்தை தேடறார்.. தேடறார்.. தேடிக் கொண்டே இருக்கிறார்!!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications