நடிகர் சேத்தன் மன்னிப்பு..ராஜ்குமார் நினைவிட சர்ச்சையால் வீடுபுகுந்து கன்னட அமைப்பினர் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவிடம் பெங்களூரில் உள்ளது. இந்த நினைவிடம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கன்னட அமைப்பினர் வீடு புகுந்து நடிகர் சேத்தன் அஹிம்சாவை வெளியே இழுத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் ராஜ்குமார். இவரை தான் வீரப்பன் கடத்தி இருந்தார். நடிகர் ராஜ்குமாருக்கு பெங்களூரில் நினைவிடம் உள்ளது. இந்நிலையில் தான் சமூக ஆர்வலரும், நடிகருமான சேத்தன் அஹிம்சா , நடிகர் ராஜ்குமாரின் நினைவிடம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

actor-chetan-ahimsa-seeks-apology-after-remarks-on-dr-rajkumar-memorial-land

இதுபற்றி சேத்தன் அஹிம்சா, ''நடிகர் ராஜ்குமார் சிறந்த நடிகர், மெகாக கலைஞர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேவேளையில் பெங்களூர் நகரின் மத்திய பகுதியில் 2006ல் அவரது சமாதிக்காக 2.5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியதை கேள்வி கேட்க வேண்டி உள்ளது. 21வது நூற்றாண்டில் இந்த நிலத்தை பிற பயன்பாட்டுக்காக அரசு வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

சேத்தன் அஹிம்சாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்னட திரைத்துறையினர், கன்னட அமைப்பினர் சேத்தன் அஹிம்சாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் நேற்றைய தினம் கன்னட அமைப்பினர் மற்றும் சாரா கோவிந்த் உள்ளிட்டவர்கள் பெங்களூரில் நடிகர் சேத்தன் அஹிம்சா வசித்து வரும் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் வீட்டுக்குள் நுழைந்து நடிகர் சேத்தன் அஹிம்சாவை வெளியே இழுத்து வந்தனர். அதன்பிறகு நடிகர் ராஜ்குமார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கோர வைத்தனர். ''நடிகர் ராஜ்குமாரின் சமாதி குறித்த எனது கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருத்தமும் தெரிவித்து கொள்கிறேன். யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் ராஜ்குமாரின் ரசிகர் தான்'' என்றார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி நடிகர் சேத்தன் அஹிம்சா மீது பசவேஸ்வரா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சேத்தன் அஹிம்சா இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+