"ஹிந்தி தான் தேசியமொழி".. சிவராஜ் குமார் சொன்னதும் கிளம்பிய எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்ட நடிகர்
பெங்களூர்: ''ஹிந்தி எளிமையான மொழி. அது நமது தேசிய மொழி'' என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியது சர்ச்சையானது. சிவராஜ்குமாரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனான சிவராஜ்குமாருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இநநிலைில் தான் சிவராஜ்குமார் தற்போது 'ஒரிஜினல் மான்ஸ்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் 'ஒரிஜினல் மான்ஸ்டர்' திரைப்படம் தொடர்பான விழாவில் சிவராஜ் குமார் பேசினார். அப்போது அப்போது அவரிடம் அவரது ஹிந்தி மொழி புலமை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சிவராஜ்குமார், ''ஹிந்தி என்பது எனக்கு 2வது மொழியாக உள்ளது. நான் ஹிந்தியில் பேசுவேன். இந்தி எளிமையான மொழழி. நமது தேசிய மொழி. இதனால் அந்த மொழி எப்படி எங்களுக்கு தெரியாமல் இருக்கும்'' என்றார். ஹிந்தி தேசியமொழி என்று கூறியதால் நடிகர் சிவராஜ்குமாரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது. ஆனால் சிவராஜ்குமார் எப்படி ஹிந்தியை தேசிய மொழியாக சொல்ல முடியும் என்று கடுமையாக சாடினர்.
இந்நிலையில் தான் சிவராஜ்குமார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக சிவராஜ்குமார், ''ஹிந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்று நான் தெரியாமல் கூறிவிட்டேன். ஹிந்தி என்பது நம் நாட்டில் பேசப்படும் ஒரு மொழி என்று கூறுவதற்கு பதில் தேசியமொழி என்று சொல்லிவிட்டேன். நான் சொன்ன வார்த்தைகள் இயல்பாக வந்தவை. யாரையும் காயப்படுத்தும் நோக்கத்துடன் இதனை நான் சொல்லில்லை. உண்மையில் நான் குழப்பமடைந்துவிட்டேன்.
என்னுடைய தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நம் நாட்டில் ஏராளமான மொழிகள் உள்ளன. அவர்கள் (ஹிந்தி பேசும் மக்கள்) ஹிந்தி பேசுகிறார்கள். நாம் கன்னடம் பேசுகிறோம். அவர்களின் மொழி அவர்களுக்கு முக்கியம் என்பது போல் நம்முடைய மொழி நமக்கு மிகவும் முக்கியம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
