விஜய் முதல்வராகிவிட்டாரே.. அரசியல் என்ட்ரி கொடுக்கும் ‘கேஜிஎப் ஹீரோ' யாஷ்.. அவரே சொன்ன பதில்
பெங்களூர்: ''விஜய் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார். அவரை போல் அதிகமான ரசிகர்களை வைத்துள்ள நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் யாஷ், ''எதிர்காலத்தில் தேவை இருக்கிறது என்றால் அரசியலுக்கு நுழைய வாய்ப்புள்ளது'' என்று கூறியிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். இவர் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றார். தற்போது 'ராமாயணம்' திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்து வருகிறார். இதன்மூலம் மீண்டும் அவர் கவனம் பெறுகிறார்.

இதுதவிர தற்போது யாஷ் 'டாக்சிக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் யாஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். யாஷ் 'ஆப் கி அதாலத்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம், ''விஜய் முதல்வராகி விட்டார். அவரை போல் அதிகமான ரசிகர்களை வைத்துள்ளீர்கள். நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? முதல்வர் ஆகும் ஆசை இருக்கா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு யாஷ், ''உண்மையில் நடிகனாக நான் நிறைய பணிகளை செய்ய வேண்டி உள்ளது. நடிகராக சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறம். நம்முடைய கன்னட சினிமாவை இன்னும் உயரிய அந்தஸ்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன். இதனால் அரசியல் பற்றிய எந்த எண்ணமும் இல்லை.
நான் புரிந்து கொண்ட வரையில் அரசியல் என்பது மக்களுக்கு ஆதரவாக முடிவெடுப்பதாகும். மக்களுக்காக பணியாற்றுவதாகும். எதிர்காலத்தில் தேவை இருக்கிறது என்றால் அரசியலுக்கு நுழைய வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது அதற்கான தேவை நிச்சயம் இல்லை. ஒரு நடினகனாக நான் செய்ய வேண்டிய பணிகள் தான் தற்போது அதிகம் உள்ளது'' என்றார்.


Click it and Unblock the Notifications
