Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் பண்ணை வீட்டில் நானா? பிரபல நடிகை மறுப்பு! இவரா அந்த விஐபி? விடிய விடிய ரேவ்பார்ட்டி லீலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களுரின் எலக்ட்ரானிக் சிட்டி பண்ணை வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகா-தமிழக எல்லையில் உள்ள, சில ரிசார்ட்களில் "ரேவ் பார்ட்டி" என்ற பெயரில் குற்ற சம்பவம் நடப்பதாக புகார்கள் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது.

Did Actress Hema attend in the Bangalore Rave Party and what happened in Bengaluru Farmhouse

இந்த ரேவ் பார்ட்டி என்பது இசை நிகழ்ச்சியாகும்.. ஆனால், சிலசமயம், போதைப்பொருள், மதுபானங்களை பயன்படுத்திவிடுகிறார்கள்.. விடிய விடிய போதையிலேயே, நிர்வாணமாகவே டான்ஸ் ஆடுகிறார்களாம்.. இப்படி நிர்வாண நடனமாடும் பெண்களுக்கு பணம் கொடுத்து, இந்த ரேவ் பார்ட்டிகளுக்கு அழைத்து வருகிறார்களாம்.

அதிக அளவில் இந்த நிகழ்ச்சிகளில் பணம் புழங்குவதாகவும், போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கர்நாடக போலீசுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதனால்தான், தமிழக போலீசும், கர்நாடக போலீஸும், எல்லைகளில் செயல்படும் ரிசார்ட்களை அடிக்கடி அதிரடி சோதனைகள் செய்து வருகிறார்கள்.

சூரிய உதயம்: எப்போதுமே இந்த பார்ட்டி, சாயங்காலம் சூரியன் மறைந்ததும்தான் ஆரம்பிக்கும்.. அதாவது, "சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை" நடத்துவதுதான் இந்த பார்ட்டியின் ஹைலைட்டாகும்.

இப்படித்தான், 2 வருடங்களுக்கு முன்பு பெங்களூரு நகரில் உள்ள ஆனெக்கல் என்ற இடத்தில், ரேவ் பார்ட்டி நடந்ததாக போலீசுக்கு தகவல் வந்தது.. இதையடுத்து, அந்த ரிசார்ட்டுக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தியதில், அந்த கும்பல் போதை பொருட்களை பயன்படுத்தியதும், பல பெண்களை நிர்வாணமாக டான்ஸ் ஆட வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Did Actress Hema attend in the Bangalore Rave Party and what happened in Bengaluru Farmhouse

இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள், highapp.com என்ற வெப்சைட்டை பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக இந்த பார்ட்டிக்கு டிக்கெட்டுகளை புக் செய்திருக்கிறார்கள்.. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐடி கம்பெனிகளில் வேலை பார்க்கும் இளைஞர்களாம்.

பண்ணை வீடு: இப்போது மீண்டும் ரேவ் பார்ட்டி பெங்களூருவில் நடந்து, பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பெங்களூரு அருகிலேயே ஜி.ஆர். என்ற ஒரு பண்ணை வீட்டில் இந்த ரேவ் பார்ட்டி நடந்துள்ளது..

மொத்தம் 71 ஆண்களும், 30 பெண்களும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை தவிர, 25க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், டிஜேக்கள், மாடல்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்..

இந்த பார்ட்டியை ஏற்பாட்டினை செய்தவர் பெயர் வாசு.. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.. இதற்காகவே ஆந்திரா, பெங்களூரிலிருந்து 100க்கும் மேற்பட்டோரை வரவழைத்திருந்தார்.. இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. இந்த பண்ணை வீடு, கான்கார்ட் நிறுவனத்தின் ஓனர், கோபால ரெட்டி என்பருக்கு சொந்தமானதாக தெரிகிறது.

பார்ட்டி: வழக்கம்போல, சாயங்காலம் பொழுது போனபிறகு, பார்ட்டி ஆரம்பமாகியிருக்கிறது.. ஆனால், அதற்குள் போலீசாருக்கு, இந்த பார்ட்டி நடக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடியாக பார்ட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டார்கள்.. விடிகாலை 3 மணிக்கு போலீசார் இந்த ரேவ் பார்ட்டி ஆக்‌ஷனை நடத்தியிருக்கிறார்கள.

அப்போது, MDMA மாத்திரைகள், கொகைன் போன்ற 45 கிராம் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்... இந்த பார்ட்டியயின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மொத்தம் 5 பேரும், அங்கிருந்த போதைப்பொருள் சப்ளையர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Did Actress Hema attend in the Bangalore Rave Party and what happened in Bengaluru Farmhouse

பென்ஸ் கார்: இந்த சோதனையின்போது, பண்ணை வீட்டில் பென்ஸ், ஜாக்குவார், ஆடி என 15-க்கும் மேற்பட்ட காஸ்ட்லி கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரும் நின்றிருந்தது.. அதற்குள் ஆய்வு செய்தபோது, ஆந்திர எம்எல்ஏ கக்கானி கோவர்த்தன ரெட்டி என்பவரது பாஸ்போர்ட் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்தனர்..

இறுதியில் அனைவர் மீதும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த பார்ட்டியில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமாவும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை தந்துவிட்டது. ஆனால், நடிகை ஹேமா இதற்கு மறுப்பு தெரிவித்து, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

"நான் ஹைதராபாத்தில் , என்னுடைய வீட்டில் இருக்கிறேன். பெங்களூர் ரேவ் பார்ட்டிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என்னை எதற்காக தேவையில்லாமல் இதில் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. கன்னட ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் கொஞ்சம்கூட உண்மையில்லை" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

பரபரப்பு: மொத்தத்தில், விடிய விடிய நடந்த இந்த ரேவ் பார்ட்டி, மிகுந்த பரபரப்பை கர்நாடகா, ஆந்திர என இரு மாநிலங்களிலுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+