என் வீங்கிய முகத்தை கிண்டல் செய்யும் அரசியல் கழுகுகளே.. நன்றி தெரிவித்த நடிகை மாளவிகா அவினாஷ்
பெங்களூர்: ஒற்றைத் தலைவலியால் தான் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டதை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான மாளவிகா அவினாஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை மாளவிகா அவினாஷை யாரும் மறந்திருக்க முடியாது. இவர் ஜே ஜே படத்தில் கதாநாயகியின் அக்காவாக நடித்திருப்பார். கதாநாயகி தனது காதலன் மாதவனை தேடுவதில் மாளவிகா உதவியாக இருப்பார்.

இவர் பைரவா, கைதி, கேஜிஎப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களான அண்ணி, சிதம்பர ரகசியம், ராஜராஜேஸ்வரி, அரசி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது காற்றுக்கென்ன வேலி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர் தொடர்ந்து கர்நாடகா பாஜக வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: யாருக்கேனும் ஒற்றை தலைவலி பிரச்சினை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அப்படி எடுத்துக் கொண்டீர்களேயானால் என்னை போல் மருத்துவமனையில் சேர்ந்து விடுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முகமே வீங்கி யாரென்றே அடையாளம் தெரியாத அளவுக்கு இவர் மாறியுள்ளார். இவர் பூரண உடல்நலம் பெற வேண்டும் என ரசிகர்களும் தொண்டர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் மனசாட்சியே இல்லாமல் டிரோல் செய்தும் வருகிறார்கள். இவர்களுக்கு மாளவிகா தக்க பதிலடியை கொடுத்துள்ளார். டிரோல் செய்தவர்களுக்கான பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது நலமாக இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்தியவர்களுக்கு என்னுடைய நன்றி. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கூட டிரோல் செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அரசியல் கழுகுகளுக்கு என்னுடைய நன்றி என மாளவிகா அவினாஷ் தெரிவித்துள்ளார்.
கிண்டல் செய்தவர்களை பல நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள். எதிரியாக இருந்தாலும் உடல்நலன் பாதிப்பு என வந்துவிட்டால் அவர்களை கிண்டல் செய்ய கூடாது என கடிந்து வருகிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றால் என்ன என்பதை பார்ப்போம். உலகில் 7 பேரில் ஒருவருக்கு இந்த மைக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலி பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. இந்த தலைவலிானது ஒரு நரம்பியல் பிரச்சினையாகும். இதில் அதிகமான தலைவலி ஏற்படக் கூடும். 4 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட இந்த தலைவலி நீடிக்கும். வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் பயணம் உள்ளிட்டவை இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணமாக சொல்லப்படுகின்றன.
மாதவிடாய் காலத்திலும் இந்த ஒற்றைத் தலைவலி சிலருக்கு ஏற்படுகிறது. ஆனால் அவர்களுக்கு மெனோபாஸ் வயதை எட்டும் போது இந்த தலைவலி குறைகிறது என்கிறார்கள். ஆனால் சிலருக்கு மெனோபாஸ் முடிந்த பிறகும் இந்த தலைவலி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகளை செய்தால் பலனளிப்பதாக சொல்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications