சுயேச்சையாக களமிறங்கி சாதித்து காட்டிய நடிகை சுமலதா அம்பரிஷ்.. குமாரசாமி மகன் அதிர்ச்சி தோல்வி
மண்டியா: கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.
இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் காங்கிரஸார் இதனை ரசிக்கவில்லை. தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.
குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவிற்கு எதிரான உள்ளடி வேலைகளிலிலும் காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக ஈடுபட்டு வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலை வகித்த நடிகை சுமலதா, இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றியை தன் வசமாக்கியுள்ளார். இதனால் குமாரசாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications