Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் என் கடைசி வீடியோ.. சாக போகிறேன்.. சீமானை தப்பிக்க விடாதீங்க.. நடிகை விஜயலட்சுமி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இதுதான் என் கடைசி வீடியோ, நானும் என் அக்காவும் சாக போகிறோம். இதற்கு சீமான்தான் முழு காரணம் என நடிகை விஜயலட்சுமி உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இதுதான் எனது கடைசி வீடியோ. நானும் எனது சகோதரியும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சாவை நோக்கி பயணிக்க போகிறோம். இந்த வீடியோவில் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நானும் சாக போகிறேன் என் அக்காவையும் கூட்டிக் கொண்டு செல்கிறேன்.

Actress Vijayalakshmi says that this is the last video of her

ஏனென்றால் நான் போய்விட்டால் என் அக்காவை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. எங்களுடைய இந்த முடிவுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் அவர்கள் கொடுத்த டார்ச்சரும்தான் காரணம். 2011ஆம் ஆண்டு நான் சீமானுக்கு எதிராக வழக்கு கொடுத்த போது இப்படித்தான் என்னை துன்புறுத்தி, அச்சுறுத்தி என்னை காங்கிரஸ் கட்சி தூண்டிவிட்டுதான் நான் வழக்கு கொடுத்தேன் என பொய் கூறினர்.

அந்த சமயத்தில் வழக்கு விசாரணையை கூட அவர்கள் தடுத்தனர். 12 ஆண்டுகள் கழித்து பாலியல் விஷயத்தை என்னால் நிரூபிக்க முடியாது என நினைத்துக் கொண்டு மீண்டும் டார்ச்சர் செய்து என் மீது மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன் என்கிறார்கள். இத்தோடு போதும். நான் என்ன முடிவு செய்திருக்கிறேன் என்றால், என்னையும் என் அக்காவையும் யாரும் வாழ விடமாட்டார்கள்.

எனவே இன்று முதல் நானும் என் அக்காவும் சாப்பாடு சாப்பிடுவதையும், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்த போகிறோம். நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க சீமானும் நாம் தமிழர் கட்சியும்தான் காரணம். அதிலும் முக்கிய காரணம் சீமான்தான். இதை காவல் துறைக்கு சொல்கிறேன். இந்த பிரச்சினையை பேசி தீர்க்காமல் கட்சியை வைத்துக் கொண்டு என்னை துன்புறுத்துகிறார்.

என்ன அசிங்கமாக பேசி, மன ரீதியில் துன்புறுத்தி, நான் 4 பேருடன் குடித்தனம் நடத்தியதாக சீமான் அவதூறு கூறி, எனக்கு தமிழகத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதனால் நான் இனியும் வாழ மாட்டேன். நான் செத்த பிறகாவது சீமானை கைது செய்யுங்கள். அவரை தப்பிக்க விடாதீர்கள். நான் சாக வேண்டும் என்பதுதான் சீமானின் ஆசையாக இருந்துச்சு!

இதற்கு மேல் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. 12 ஆண்டுகளாக நரக வேதனையை அனுபவித்துவிட்டேன். விடியல் கிடைக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் கிடைக்கவே இல்லை. எனக்கு இன்னமும் கெட்ட பெயர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நிறுத்தவே மாட்டேங்கிறார்கள்.

எனவே இந்த பிரச்சினைக்கு நாங்கள் முடிவு கொடுத்துக் கொள்கிறோம். நானும் என் அக்காவும் முடித்துக் கொள்கிறோம். காவல் துறை என்றைக்கும் சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் விடாதீர்கள். எனவே உறுதியாக சாப்பாடு தண்ணீர் அருந்துவதை நிறுத்த போகிறோம். இதன் பிறகாவது சீமானை கைது செய்து என்ன ஆக்ஷன் எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள். இதுதான் என் கடைசி வீடியோ, எல்லாருக்கும் மிகவும் நன்றி. இவ்வாறு விஜயலட்சுமி அந்த வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். சீமான் விவகாரத்தில் ஏற்கெனவே இரு முறை தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவை எடுத்தவர் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+