சூரியனின் மர்மத்தை உடைக்க தயாராகும் "ஆதித்யா எல் -1.." என்னென்ன ஆய்வுகள் செய்யப்போகுது தெரியுமா?
பெங்களூர்: நாளை மறுநாள் விண்ணுக்கு ஏவப்பட இருக்கும் 'ஆதித்யா- எல்1' விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு விரிவான தகவல்களை வழங்கியுள்ளனர். அதன் விவரங்களை பார்க்கலாம்.
விண்வெளி துறையில் பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை இந்தியா செய்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்த சாதனையும் இந்தியா படைத்துள்ளது. நிலவில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்யாத தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான் விண்கலம் தற்போது ஆய்வுகளை செய்து வருகிறது. நிலவில் ஆக்சிஜன், சல்பர் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் சந்திரயான் விண்கலம் கண்டுபிடித்தது.

தொடர்ந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க இஸ்ரோ, அடுத்த கட்டமாக சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டது. இதற்காக 'ஆதித்யா- எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் சனிக்கிழமை விண்ணில் செலுத்த உள்ளது. காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான கவுண்டவுன் நாளை தொடங்க உள்ளது. விண்ணில் ஏவப்படும் 'ஆதித்யா-எல் -1' விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்தும் சூரியனில் எந்த மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது என்பது பற்றியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- சூரியனை ஆய்வு செய்ய செல்லும் ஆதித்யா எல் 1 விண்கலத்தில் சூரியனின் கொரோனா, குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர் மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை செய்வதற்காக கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளுக்காக மொத்தம் 7 கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்தக் கருவிகள் மூலம் வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ள முடியும். மேலும் கருவியில் உள்ள நான்கு ரிமோட் சென்சிங் கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்கள் உள்ளிட்டவையும் அடங்கும்" இப்படி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. சந்திரயான் விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை உலகத்திற்கு சொன்ன இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல் -1 மூலமும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகத்திற்கு சொல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications