‛‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்’’ .. கர்நாடகா சட்டசபையில் கோஷம்! காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டத்தில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது கர்நாடகா சட்டசபையில் ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என சிலர் கோஷமிட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் இருந்த ராஜ்யசபா எம்பியாக உள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர், ஹனுமந்தய்யா ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2ம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த 4 இடங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் தேசிய பொருளாளர் அஜய் மக்கான், நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக சார்பில் நாராயண பாண்டேகே களமிறங்கினார். மேலும் ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டார். 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டால் இன்று ராஜ்யசபா தேர்தல் நடந்தது.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒருவர் ராஜ்யசபா எம்பியாக மொத்தம் 45 எம்எல்ஏக்கள் ஓட்டளிக்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ಪಾಕಿಸ್ಥಾನಿ ಸಹಾನುಭೂತಿಗೆ ರಾಜಾತಿಥ್ಯ ನೀಡಿದ್ದಾಯಿತು - ಈಗ ಪಾಕಿಸ್ಥಾನಿ ಬೆಂಬಲಿಗ ನಾಯಕನಿಗೆ ರಾಜ್ಯಸಭೆಯ ಸದಸ್ಯನ ಪಟ್ಟ. ಇದು @INCKarnataka ಕರ್ನಾಟಕವನ್ನು ಭಾರತ ವಿರೋಧಿ ಕೇಂದ್ರವನ್ನಾಗಿಸಿರುವ ಪರಿ.
— BJP Karnataka (@BJP4Karnataka) February 27, 2024
ಭಯೋತ್ಪಾದಕರಿಗೆ ಬ್ರದರ್ಸ್, ಅಮಾಯಕರು ಎಂಬ ಪಟ್ಟ ಕಟ್ಟಿದ ಕಾಂಗ್ರೆಸ್ನ ತುಷ್ಟೀಕರಣದ ರಾಜಕೀಯದ ಫಲಿತಾಂಶ ಪದೇ ಪದೇ ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ… pic.twitter.com/z9gsrbu99e
பாஜகவுக்கு 66 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் அந்த கட்சியின் வேட்பாளரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாறாக ஜேடிஎஸ்ஸின் குபேந்திர ரெட்டியின் வெற்றி தான் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில உள்ள நிலையில் அந்த கட்சியில் மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மற்றும் ஜேடிஎஸ்ஸின் 19 எம்எல்ஏக்கள் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெறும் முனைப்பில் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை குபேந்திர ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிக்க குதிரைபேரம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இன்றைய தினம் எம்எல்ஏக்கள் கர்நாடகா சட்டசபையில் ஓட்டளித்தனர். இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று மாலையில் முடிவடைந்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர்கள் அஜய் மக்கான் 47 ஓட்டுகளும், சையத் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் தலா 46 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். அதேபோல் பாஜக வேட்பாளர் நாராயண்சா பாண்டேகாவும் வெற்றி பெற்றார். மாறாக காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களை நம்பி களமிறங்கிய ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தான் கர்நாடகா சட்டசபையான பெங்களூர் விதானசவுதாவில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வேளையில் காங்கிரஸ் வேட்பாளர் நசீர் உசேனை சூழ்ந்து அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். அப்போது சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications