Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைகீழாகும் கர்நாடக நிலவரம்.. காங்கிரசுக்கு எம்எல்ஏக்கள் ஜம்ப்.. ஜேடிஎஸ், பாஜகவிற்கு பெரிய அடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளில் எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைய தொடங்கி உள்ளனர். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என கூறப்படும் நிலையில் இந்த கட்சி தாவல் துவங்கி உள்ளது. இதனால் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு செல்லாமல் தடுக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 10ல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடைபெற உள்ளது.

இதனால் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், புதுவரவான ஆம்ஆத்மி கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

கட்சி மாறும் எம்எல்ஏக்கள்

கட்சி மாறும் எம்எல்ஏக்கள்

இந்நிலையில் தான் கர்நாடகாவில் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட பலரும் கட்சி மாற தொடங்கி உள்ளனர். குறிப்பாக சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மாற்று கட்சியில் இணைய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தற்போது கர்நாடகாவை பொறுத்தமட்டில் பலரும் காங்கிரஸ் கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக, ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய தொடங்கி உள்ளனர். இதனால் பாஜக, ஜேடிஎஸ் கட்சி அதிர்ச்சியை எதிர்கொண்டு வருகின்றனர்.

 எஸ்ஆர் சீனிவாஸ்

எஸ்ஆர் சீனிவாஸ்

அதன்படி துமகூரு மாவட்டம் குப்பி சட்டசபை தொகுதி ஜேடிஎஸ் எம்எல்ஏவான எஸ்ஆர் சீனிவாஸ் அந்த கட்சியில் இருந்து விலகினார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எஸ்ஆர் சீனிவாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதன்மூலம் வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குப்பி தொகுதியில் எஸ்ஆர் சீனிவாஸ் களமிறங்க உள்ளார். ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார்.

ராமசாமி

ராமசாமி

இதேபோல் ஹாசன் மாவட்டம் அரக்கல்கூடு தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏ ராமசாமியும் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். முன்னாள் அமைச்சரான ஏ மஞ்சு காங்கிரஸில் இருந்து பாஜக தாவிய நிலையில் இப்போது ஜேடிஎஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு தான் ஜேடிஎஸ் சார்பில் அரக்கல்கூடு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் ராமசாமி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். இவர் இந்த தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 கோபாலகிருஷ்ணா

கோபாலகிருஷ்ணா

இதேபோல் விஜயநகர் மாவட்டம் கூட்லகி பாஜக எம்எல்ஏ கோபாலகிருஷ்ணாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் செயல்பட்டார். இவர் சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 1997, 1999, 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அவருக்கு காங்கிரஸில் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் பாஜகவில் இணைந்த நிலையில் கூட்லகி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் பாஜகவினர் மீதான அதிருப்தியில் கோபாலகிருஷ்ணாவும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

சிவலிங்கே கவுடா

சிவலிங்கே கவுடா

இதேபோல் ஹாசன் மாவட்டம் அரிசிக்கெரே தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏவாக சிவலிங்கே கவுடா உள்ளார். இவரும் ஜேடிஎஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதோடு, காங்கிரஸ் கட்சியினருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் அவரும் விரைவில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரிலும் கட்சி மாற்றம்?

பெங்களூரிலும் கட்சி மாற்றம்?

இதுதவிர கடந்த முறை காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கும் வகையில் பாஜகவில் இணைந்த சிலர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸில் இருந்து விலகி பெங்களூர் நகரில் உள்ள சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் இன்னும் சில நாட்களில் கட்சி தாவலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்கு வரும் நபர்களுக்கு மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் இன்னும் பெங்களூரில் உள்ள சில தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+