ஒரே ஏரியாவை பலமுறை தாழ்வாக சுற்றி வந்த விமானம்.. பதறிய பெங்களூர்.. என்னாச்சு?
பெங்களூர்: பெங்களூர் பகுதியில் வானில் ஒரு விமானம் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாழ்வாக ஒரே பாதையில் வட்டமடித்துச் சுற்றி வருவது பெங்களூர் வாசிகளை பதற வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் தெற்கு பகுதி மக்கள் இன்று இரவு வானில் ஒரு ஆச்சர்யமான விஷயத்தைப் பார்த்தனர். பெங்களூர் தெற்கு பகுதியின் ஜேபி நகர் பகுதியில் இருந்து கார்மேல்ராம் பகுதிக்குச் செல்வதும், மீண்டும் அங்கிருந்து திரும்பி வருவதுமாக ஒரு விமானம் நீண்ட நேரமாக வட்டமடித்தபடி இருந்துள்ளது.

இந்த விமானம் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக தாழ்வாகப் பறந்தாவாறு பெங்களூரை வட்டமடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வாகப் பறந்ததால் அதிக சத்தமும் எழுந்துள்ளது. இந்த விமானம் ஒரே நீள்வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஏன் ஒரு விமானம், ஒரே பாதையில் வட்டம் போட்டவாறு பறக்கிறது என பெங்களூர் வாசிகள் குழம்பினர். திடீரென பெங்களூர் நகருக்கு மேலே வானில் பறந்து வட்டமடிக்கும் விமானம் பற்றி விமான டிராக்கிங் ஆப்களில் தேடியதில் அந்த விமானம் ஏர் ஆகாசா விமானம் என தெரியவந்தது.

வானில் வட்டமடிக்கும் விமானம் பற்றி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சந்தேகம் எழுப்பினர். மேலும் பலரும், இன்னும் பெங்களூருக்கு மேலே இந்த விமானம் பறந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஃப்ளைட் ட்ராக்கிங் நிறுவனம் ஒன்று, இந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications