Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RCB-KKR போட்டி.. கோலியை விட ராகுல் காந்திக்கு குவிந்த ஆதரவு! கவனிச்சீங்களா.. ஆஹா.. காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆர்சிபி-கேகேஆர் அணிகள் மோதின. இந்த போட்டியில் கர்நாடகா சட்டசபை தேர்தல் என்பது எதிரொலித்தது. இதன்மூலம் விராட் கோலியைபோல் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் கோஷமிட்டு பதாகைகளை ஏந்தியிருக்கும் வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பின்னணி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதோடு இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றினால் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என கதர் கட்சியின் தலைவர்கள் நினைக்கின்றனர்.

Amid of RCB-KKR Match Karnataka youths thanking for rahul gandhi for ‛yuvanidhi scheme

இதனால் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உள்பட பல தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சில வாக்குறுதிகளை மக்களிடம் கூறியுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப தலைவர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வினியோகம் செய்யப்படும். அன்னபாக்யா திட்டம் மூலம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் ‛யுவநிதி' எனும் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பை படித்து வேலை கிடைக்காமல் இருப்போருக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500ம் வழங்கப்படம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இந்த 4 திட்டங்களையும் ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் கட்சி அமல்படுத்தும் என ராகுல் காந்தி பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ அரிசி இலவசம் போன்ற திட்டங்கள் குடும்ப தலைவி, குடும்ப தலைவர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் யுவநிதி திட்டம் என்பது படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.

Amid of RCB-KKR Match Karnataka youths thanking for rahul gandhi for ‛yuvanidhi scheme

மேலும் இதுபோன்ற திட்டங்களால் கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு இளைஞர்கள் சப்போர்ட் செய்ய தொடங்கி உள்ளனர். இது நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் எதிரொலித்தது. அதாவது ஐபிஎல்லில் நேற்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர்-கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக ஆடி 37 பந்தில் 54 ரன்கள் குவித்தார். இருப்பினும் அவரது அதிரடி ஆட்டம் வீணானது. மேலும் விராட் கோலி ரன்கள் விளாசியபோது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் ஏராளமானவர்கள் ‛‛ராகுல்.. ராகுல்..'' என கோஷமிட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த போட்டியின் காங்கிரஸ் கட்சியின் ‛யுவநிதி' திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இளம்பெண்கள், இளைஞர்கள் ‛ராகுல்.. ராகுல்..'' என்ற கோஷமிட்டு ஸ்டேடியத்தை அதிரவைத்தனர். மேலும் அவர்கள், ‛‛Thank You Rahul Gandhi for Yuva Nithi'' என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த பதாகைகளை உயர்த்தி காட்டி கவனம் ஈர்த்தனர். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+