பிரச்சார பவர்.. மோடி, அமித்ஷாவை தட்டித்தூக்கிய ராகுல், பிரியங்கா! கர்நாடகாவில் மாஸான ஸ்ட்ரைக் ரேட்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் பிரமாண்ட வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், எந்த தலைவரின் பிரச்சாரத்துக்கு அதிகளவிலான வெற்றி கிடைத்து இருக்கிறது என்பதை பார்ப்போம்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகா மாநில பாரதிய ஜனதா அரசின் ஆட்சிகாலம் நிறைவடைவதை அடுத்து கடந்த மே 10 ஆம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் கர்நாடகாவில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட அதிகமான இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. அந்த கட்சி 136 தொகுதிகளிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களிலும் வெற்றிபெற்று உள்ளன உள்ளன.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், இதர வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்று உள்ளார்கள். கர்நாடகா தேர்தல் தோல்வியை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவியில் இருந்து ராஜினாமா செய்து, தோல்வியின் முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் யார் என்பதை இன்று எம்.எல்.ஏக்களை கூட்டி முடிவு செய்கிறது.
இந்த நிலையில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக பல்வேறு வீயூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களில் களமிறங்கியது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகாவுக்கு வருகை தந்துகொண்டு இருந்தனர்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு மக்களின் ஆதரவை பெற்றனர். இந்த 4 தலைவர்களில் யார் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் அதிக வெற்றி கிடைத்து இருக்கிறது? யார் அதிக மக்கள் ஆதரவை பெற்று உள்ளார்கள் என்று பார்ப்போம்.
அந்த வகையில் பாஜகவை எடுத்துக்கொண்டால் நட்சத்திர பிரச்சாரர்களாக திகழ்ந்தது பிரதமர் மோடியும், அமித்ஷாவும்தான். இதில் பிரதமர் நரேந்திர மோடியை எடுத்துக்கொண்டால் மொத்தம் 42 தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறார். இதில் 22 இடங்களில் பாஜக வெற்றிபெற்று ஸ்ட்ரைக் ரேட் 52.4% ஆக உள்ளது. 20 இடங்களில் தோல்வியடைந்து 47.6% ஆக ஸ்ட்ரைக் ரேட் உள்ளது.
இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மொத்தம் 30 தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார். இதில் 11 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்று ஸ்ட்ரைக் ரேட் 36.7% ஆக உள்ளது. அவர் பிரச்சாரம் செய்த 19 இடங்களில் அக்கட்சி தோல்வியடைந்து 63.3% ஆக ஸ்ட்ரைக் ரேட் உள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஸ்டார் பேச்சாளர்களாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரே கர்நாடகாவில் பார்க்கப்பட்டனர். ராகுல் காந்தி மொத்தம் 22 தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறார். இதில் 16 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று அவரது ஸ்ட்ரைக் ரேட் 72.7% ஆக உள்ளது. 6 இடங்களில் அக்கட்சி தோல்வியடைந்து 27.3% ஆக ஸ்ட்ரைக் ரேட் உள்ளது.
அதேபோல் பிரியங்கா காந்தியை எடுத்துக்கொண்டால் அவர் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 27 தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறார். இதில் 17 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று அவரது ஸ்ட்ரைக் ரேட் 63% ஆக உள்ளது. 10 இடங்களில் அக்கட்சி தோல்வியடைந்து 37% ஆக ஸ்ட்ரைக் ரேட் உள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications